Site icon Nangooram

ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் இந்தியாவின் அடையாளங்கள்! பிரதமர் நடேந்திர மோடி  நெகிழ்ச்சி பேச்சு!

நம் நாட்டினை வல்லரசாக்கி கொண்டிருக்கும், அனைத்து நாடுகளும் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் நம் இந்திய திருநாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாட்டில் நடந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு நெகிழ்ச்சியுடன் உரையாற்றிய போது,

இந்தியாவின் அடையாளங்கள் !
சிவனின் தரிசனமும், இளையராஜாவின் இசையும் என் ஆத்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்தி விட்டது ; கங்கைகொண்ட சோழபுரம் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து விட்டேன்.

தமிழ் மொழியில் பகவத்கீதையின் இசைத் தொகுப்பு வெளியிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது; சோழ அரசர்களின் அரசியல், வணிக தொடர்பு மாலத்தீவு துவங்கி கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவி இருந்தது ;

ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் இந்தியாவின் அடையாளங்கள். சோழர்களின் சாதனைகள் இந்தியாவின் பலத்திற்கு எடுத்துக்காட்டு.

இன்று உலகம் பேசும் நீர் மேலாண்மைக்கு முன்னோடிகள் சோழர்கள் ; உலகின் கட்டிடவியல் அற்புதங்களில் ஒன்று கங்கை கொண்ட சோழபுரம்.

காவிரி மண்ணில் கங்கைக்குத் திருவிழா எடுத்தவன் ராஜேந்திர சோழன் ; காசியிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ; காவிரி கரைக்கு கங்கை கரையிலிருந்து வந்துள்ளேன்.

நிலவில் சிவசக்தி பெயர் !
பார்லியில் செங்கோல் நிறுவியதை என் கனவில் நினைத்தாலும் பெருமிதமாக உள்ளது ; இந்தியாவின் புதிய பார்லியில் தமிழ் ஒலித்தது ; சிதம்பர நடராஜரின் ஆனந்த தாண்டவம் டில்லிக்கு அழகு சேர்க்கிறது ; நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என பெயரிட்டுள்ளோம் ; இதன் மூலம் பூமியைத் தாண்டி சிவனின் பெயர் புகழ்பெற்றுள்ளது

முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி பெருமிதத்துடனும் மகிழ்ச்சியோடும் பேசி உள்ளார்கள்.

Customize Text: Font Color:
Exit mobile version