Site icon Nangooram

பித்ருக்களின் 96 தர்ப்பணங்கள் பற்றி தெரியுமா? அதன் முக்கியத்துவம் என்ன?

ஷண்ணவதி தர்ப்பணம் என்பது ஒரு வருடத்தில் 96 நாட்கள் பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) தர்ப்பணம் கொடுக்கும் ஒரு சடங்காகும். இந்த 96 நாட்களும் அமாவாசை, சங்கராந்தி, மன்வந்த்ரம், யுகாதி, வைதிருதி, வியதீபாதம் போன்ற முக்கியமான நாட்களில் அடங்கும்.

ஷண்ணவதி தர்ப்பணத்தில் வரும் 96 நாட்கள்:


அமாவாசை (12): ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை நாட்கள்.


சங்கராந்தி (12): சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் நாட்கள்.


வியதீபாதம் (13): ஒரு குறிப்பிட்ட யோகமாகும்.


வைதிருதி (13): மற்றொரு குறிப்பிட்ட யோகமாகும்.


மன்வந்த்ரம் (14): ஒரு யுகத்தின் ஒரு பகுதி.


யுகாதி (4): கிருத, த்ரேதா, துவாபர மற்றும் கலி யுகங்களின் தொடக்கம்.


அஷ்டகா, அன்வஷ்டகா, திரிகஸ்ரௌகஷ்டகா (12): இவை அனைத்தும் பித்ரு காரியங்களுக்குரிய நாட்களாகும்.


இந்த 96 நாட்களும் பித்ருக்களின் ஆசீர்வாதத்தைப் பெறவும், அவர்களுக்கு சாந்தி அளிக்கவும் தர்ப்பணம் செய்யப்படுகிறது

பெற்றோர்களை நாம் காப்பதற்கு பெயர் கடமை, அவர்கள் காலமானவுடன் பித்ரு கடன் செலுத்தவில்லையென்றால் வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்து நம் குட்டிகள் தலையில் தான் விழும்.

பித்ருக்களுக்கு நாம் செய்யும் பித்ரு கர்மாக்கள்தான் நம் சந்ததியருக்கு நம்மாள் கொடுக்கப்படும் இருப்பு வைப்புத் தொகையாகும். பித்ருக்களுக்கு ஒரு வருடத்திற்கு 96 நாட்கள் பசியெடுக்கும் நாட்கள் ஆகையால் ஒரு வருடத்திற்கு தொன்னூற்றாறு தர்ப்பணங்கள் அவசியம் கொடுக்க வேண்டும்.

சிலர் பன்னிரண்டு மாத தர்ப்பணங்கள் வழக்கமில்லை நான்கு மாதம் தான் வழக்கம் என்று கூறுகிறார்கள். சாப்பிடும் விஷயத்தில் வழக்கமில்லாததையெல்லாம் செய்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டவர்கள் அந்த சாப்பாட்டிற்கு மூலகாரணமான பித்ருக்களுக்கு செய்வதில் மட்டும் வழக்கம் என்று ஏன் வைத்துள்ளார்கள் என்றுதெரியவில்லை.?


பிரதி வருடம் தாய்,தந்தை திதியன்று
சிரார்த்தம் செய்யாமல் ஆலயத்திலோ மடத்திலோ அனாதை ஆசிரமம் முதியோர் இல்லம் ஆகியவைகளிலோ பணத்தைக்கட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தாலும், புண்ணியம் அக்கௌன்டிற்கு போகுமே தவிர பித்ருக்களின் அக்கௌன்டிற்கு போகாது.


சிரார்த்தத்திற்கு பதினைந்து நாட்கள் முன்பே நம் பித்ருக்கள் நம் வீட்டிற்கு வந்து விடுவதால் அந்த பித்ரு பக்ஷ்ச
சிரார்த்தம் முதல் மறுநாள் வரை வீட்டில் சிரார்த்த கறிகாய்களே சமைக்க வேண்டும்.வெங்காயம், பூண்டு, முருங்கை, கத்திரி முதலியவை தவிர்க்க வேண்டும் சவரம் செய்து கொள்ளகூடாது.அதற்கு பித்ருதீஷை என்று பெயர் இவைகளின் மூலம் குடும்பத்தில் பித்ருக்கள் ப்ரீதியடைந்து மனம் குளிர்ந்து அனுக்ரஹம் செய்வார்கள்.

குடும்பத்தில் ஒரு குறையும் இருக்காது.
திருமணத்தடை, குழந்தை பாக்கியத்தடை ஆகிய அனைத்துத் தடைகளும் நீங்கும்.குலதேவதையும், பித்ருதேவதையும் நம் இரண்டு கண்கள்.நமக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தவர்களுக்கு தர்ப்பணம் செய்வோம்.முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் விதி மாறும்.நாம் அவர்களுக்கு கொடுப்பதோ ஜலம்,அவர்கள் நமக்களிப்பதோ நலம்,அவர்களை என்றும் வருவோம் வலம்,அவர்கள் நமக்களிப்பார்கள் வளம்,இறந்தவர்களுக்கு செய்வதே
இருப்பவர்களுக்கு நலம்,பித்ருக்களின் பலம் இருந்தால்,சத்ருக்களின் பலம் குறையும்.நீத்தார் கடன்,நீர்க்கடன்
நிறைவேற்றினால் நினைத்தது
நிறைவேறும்.முன் வினை அகற்றி
முன்னேற்றம் தரும் முன்னோர் வழிபாடு !

நாமும் ஒவ்வொரு வருடமும் மேற்குறிப்பிட்ட 96 நாட்கள் இந்த உடலையும், உயிரையும் உலகிற்கு அர்ப்பணித்துச் சென்ற நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் அனுக்கிரகத்தைப் பெற்று வளமோடு வாழ்வோமாக!

Customize Text: Font Color:
Exit mobile version