Site icon Nangooram

இறைவனுக்கு மலர் அர்ச்சனை செய்து வழிபடுவது எப்படி?


வாசமுள்ள மலர்களால் தான் சுவாமியை அர்ச்சிக்க வேண்டும்.

அவ்வாறு அர்ச்சிக்கும் போது மலர்களை சுவாமியின் மேல் தூக்கி எறியாமல் சுவாமியின் திருப்பாதங்கள், ஆயுதங்கள், திருக்கரங்கள், திருவயிறு, மார்பு, திருமகுடம் இவற்றில் மென்மையாக மலர்களை வைத்து அலங்கரித்தலே சிறப்பாகும்.

ஒவ்வொரு வித வண்ண மலர்களுக்கும் உரிய மந்திரத்துடன் அர்ச்சனை செய்வதால் உங்கள் வழிபாட்டின் பலன்கள் பன்மடங்காகக் பெருகும் என்பது திண்ணம்.

உதாரணமாக, செவ்வந்தி, கொன்றை, பொன்னரளி போன்ற மஞ்சள் வண்ண மலர்களால் அர்ச்சிக்கும்போது “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ” என்று அர்ச்சிக்க வேண்டும்

வெண்தாமரை, மல்லிகை, வெண்ணிற அல்லி போன்ற வெள்ளை நிற மலர்களால் அர்ச்சிக்கும்போது “ஹரி ஓம் சோமாய நமஹ” என்று அர்ச்சிக்க வேண்டும்

செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களால் அர்ச்சிக்கும்போது “ஓம் கார்த்திகாய நமஹ” என்று அர்ச்சிக்க வேண்டும்

பவளமல்லி மலர்களால் அர்ச்சிக்கும்போது “ஓம் ஈஸ்வராய நமஹ” என்று அர்ச்சித்தல் சிறப்பு.

அனைவரும் இலட்சுமி கடாட்சம் தரும் பவளமல்லியை தங்கள் வீட்டில் வளர்த்து இறைவனுக்குச் சூடி மகிழ வேண்டும் என்பது ரிஷிகளின் நோக்கமாகும்.

Customize Text: Font Color:
Exit mobile version