விஞ்ஞானமே வியந்து பார்க்கும் நம் முன்னோர்களின் கற்கோவில் வழிபாடும், அதில் பொதிந்து கிடக்கும் அறிவியல் ஆதாரமும் உலகையே வியக்க வைத்துள்ளது.
காலம்தொட்டு நம் தமிழர் மரபில் கோவில் கட்டி கும்பிட்டு வருவது வழக்கம். மன்னர்களும் மாமனிதர்களும் அந்தக் காலத்திலேயே பிரம்மாண்ட கோவில்களைக் கட்டி வழிபட்டு வந்தனர். அவன் சாமி கும்பிடுறதால தாண்டா அவன் உடம்பும் வாழ்க்கையும் ஆரோக்கியமா இருக்கு என பேசிக் கொள்வார்கள். உண்மையாகவே நாம் கோவிலுக்குப் போகும்போது நம் மனதிலும் உடலிலும் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அந்த புத்துணர்ச்சி எப்படி நம் உடலுக்கும் மனதிற்கும் கிடைக்கிறது. இதோ ஓர் அறிவியல் பூர்வமான அலசல்!
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் அந்தக் காலத்திலேயே கோவில்கள் கட்டியிருக்கிறார்கள். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான். இதன் குறிப்பு.கோயில்களில் ஒரு அபரிமிதமான காந்த சக்தியும், நேர்மறை ஆற்றலும் அதிகம் கொண்டிருக்கும். வட துருவமும் தென் துருவமும் இணையும் அந்த சிறிய இடத்தில் தான் கடவுளின் சிலை வீற்றிருக்கும். அதை நாம் கர்ப்ப கிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
மூலஸ்தானத்தில் சிலைக்கு கீழே செப்புத் தகடுகளை வைத்து பதிக்கப்பட்டிருக்கும். இந்த செப்புத் தகடுகள் அந்த காந்த ஆற்றலை ஈர்த்து வெளியே கொண்டு வரும் ஆற்றலை உடையது. அந்த மூலஸ்தானத்தில் மூன்று பக்கமும் சிலைக்கு நெருக்கமாக சுவரை எழுப்பி, ஒரு பக்கம் மட்டும் பக்தர்கள் உள்ளே வந்து கடவுளை வணங்கும் வண்ணமாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஒரு பக்கம் திறந்திருக்கும் வழியின் மூலமாகத்தான் அந்த காந்த ஆற்றல் நமக்கு கிடைக்கிறது.
அது மட்டுமின்றி கோவிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த காந்த ஆற்றல் கோவில் கருவறையின் இடமிருந்து வலமாக பாய்கிறது. அந்தச் சுற்றுப் பாதையில் நாம் மூலஸ்தானத்தை சுற்றும்போது காந்த ஆற்றலும் நம் உடலை முழுமையாக வந்தடைகிறது. காந்த ஆற்றலும் நேர்மறை ஆற்றலும் நம் உடலுக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒருவித சக்தியை கொடுக்கிறது.கோவிலின் கருவறையில் எப்போதும் ஒரு விளக்கு எரிந்துகொண்டே இருக்கும். மேலும் கோவில் விக்கிரகத்திற்கு பின் புறமும் ஒரு விளக்கு எரிந்துகொண்டே இருக்கும். ஆனால் இப்போது விக்கிரகத்திற்கு பின்புறம் மின்சார விளக்குகளையே எரிய விடுகிறார்கள். விளக்கில் இருந்து வெளிப்படும் ஒளி, காந்த ஆற்றலை உந்தி வெளியே தள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது.
அது போக மந்திரம் சொல்லும் போது மணியடிப்பதும், அங்கே செய்யப்படும் அபிஷேகம் அந்த ஆற்றலை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரி விதமான காந்த ஆற்றலை கொடுக்கிறது. அபிஷேகம், கற்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 அறையில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மட்டும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொண்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடத்தில் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த ஆற்றலை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கற்பூரம், துளசி, குங்குமப்பூ, கிராம்பு இதை சேர்த்து அங்கு காப்பர் பாத்திரத்தில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

