Site icon Nangooram

குழந்தைச் செல்வத்தை கொடுக்கும் அற்புத முருகன் ஆலயம்

ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி
திருக்கோவில்.

ஹரிப்பாடு,
ஆலப்புழா மாவட்டம்,
கேரளா மாநிலம்.

இக்கோவில் கேரளத்தில் உள்ள பழமையான முருகன் கோவில்களில் ஒன்றாகும். முருகனுக்கு அமைக்கப்பட்ட இந்தக் கோவிலானது தட்சிண பழனி (தென் பழனி) என்று அழைக்கப்படுகிறது. கலியுகத்திற்கு முன்பே இந்த கோவில் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இதுவே கேரளத்தின் மிகப் பெரிய முருகன் கோவிலாகும். மேலும் இங்குள்ள கொடிக்கம்பமும் மிக உயர்ந்தது ஆகும்.

இந்தக் கோவில் முருகன் சிலையானது பரசுராமரால் வழிபடப்பட்டு பின்னர் கோவிந்தமுட்டம் உப்பங்கடலில் உள்ள கந்தநல்லூரில் விடப்பட்டதாகவும், அதில் இருந்து மீட்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. சிலை நெல்புரகடலில் கரைக்கு கொண்டு வரப்பட்டது. சிலையை மீட்டதை நிணைவு கூறும் வகையிலேயே பயிப்பாடு வல்லம் களி அல்லது ஜலோத்சவம் என்னும் மூன்று நாள் திருவிழாவானது திருவோணத்துக்குப் பிறகு பையாப்பட்டு ஆற்றில் நடத்தப்படுகிறது. சிலை மீட்கப்பட்டப்பிறகு கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த தாரகன்மார் என்பவருக்கு சொந்தமான ஒரு ஆலமரத்தின் கீழ் அரை நாழிகை (அரை மணி நேரம் ) இந்த சிலை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதாக தொன்மவியல் கூறுகிறது. இப்போதும் இந்த இடத்தில் “அரை நாழிகை அம்பலம்” என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கோவில் உள்ளது.

தை மாதத்தில் பூசம் நட்சத்திரத்தில் இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கோயிலின் ஸ்தாபக நாளாக கொண்டாடப்படுகிறது. கோவிலை குடமுழுக்கு செய்ய விஷ்ணு ஒரு துறவியாக தோன்றினார் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வதால் குழந்தை பாக்கியம், செல்வ வளம், நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதாக மக்கள் நம்புகின்றனர்.

 

[font_control]

Customize Text: Font Color:
Exit mobile version