Site icon Nangooram

சகல தோஷங்களையும் சரணடைய வைக்கும் பரிகாரங்கள்


பாவம் போக்கும் பழமை மிக்க பரிகாரங்கள்

ஆலயங்களை சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

துளசி செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவங்கள் விலகும்.

மலர் செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.

ஆலயங்களை சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

உழவார பணிகளை மேற்கொண்டால் பிறவி பயனை அடைய இயலும்.

தொழு நோயாளிக்கு வயிராற விருந்து அளித்தால் கர்ம வினைகள் நீங்கும்.

பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிடைக்கும்.

கோவில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும்.

சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷம் நெருங்காது.

தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கிடைக்கும்.

ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், திருஷ்டி, திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

காக்கைக்கு காலையில் உணவளித்தால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.

Customize Text: Font Color:
Exit mobile version