Site icon Nangooram

தலைவாசல் கதவில் குடியிருக்கும், குலம் காக்கும் குலதெய்வம் பற்றி தெரியுமா?

ஆயிரம் தெய்வங்களை நாம் வழிபட்டாலும் எங்கு சென்றாலும், நம்மை பின்தொடர்ந்து நிழல் போல் கூடவே இருந்து நம்மை பாதுகாக்கும் தெய்வம் குலதெய்வம் மட்டுமே!

உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டின் கதவில் தான் குடியிருக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டின் கதவை சத்தமில்லாமல் திறக்கவும், மூடவும் கூறுவார்கள். அடிக்கடி எண்ணெய் விட்டு சுலபமாக மூடும்படி வைத்திருப்பார்கள்.
குழந்தைகள் கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் பொழுது பெரியவர்கள் அதட்டுவதை நாம் கேட்டிருப்போம்.

வீட்டின் தலை வாசலில் இருபுறங்களிலும் விளக்கு ஏற்றி வைப்பது பண்டைய கால வழக்கமாக நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
அந்த இரண்டு புறங்களிலும் கும்ப தேவதைகள் அமர்ந்திருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்த தேவதைகளை குளிர்விக்கவே அப்பகுதியில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. அவர்களை வணங்குவதற்காகவே வீட்டின் தலைவாசலை குள்ளமாக வடிவமைத்து வைத்திருப்பார்கள்.

அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டிற்குள் நுழையும் முன் கும்ப தேவதைகளை வணங்கி செல்லுவதற்கு தான் இவ்வாறு உயரம் குறைவாக முந்தைய காலங்களில் கதவுகள் வடிவமைக்கப்பட்டன.

அது போல எப்படி நம் கோவில்களில் வாசல் படியை மிதிக்காமல் தாண்டி உள்ளே செல்கிறோமோ
அதே போல் தான் வீடு என்னும் கோவிலில் வாசல் படிகளை தாண்டி உள்ளே செல்லவேண்டும்.

நம் வீட்டின் நிலைவாசல் படிகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடுவதும் இந்த தேவதைகளுக்கு தான்.அத்தகைய தெய்வீக சக்தி வாய்ந்த இந்த நிலவாசல் படியை மிதித்துக் கொண்டு உள்ளே செல்லக் கூடாது.அது போல் ஒருபோதும் நிலை வாசல் படியில் அமரக்கூடாது.

வீட்டின் தலை வாசலில் மகாலட்சுமிகளும், கதவில் குலதெய்வமும் வாசம் செய்வதால் அந்த இடத்தில் தலை வைத்து படுக்கக்கூடாது, தரித்திரம் ஏற்படுத்தும் என்பார்கள். அது போல் தலைவாசலில் கால் வைத்து நிற்கக் கூடாது. அங்கு நின்று தும்முவது, தலை வாருவது போன்றவற்றை செய்தால் வீட்டில் தரித்திரம் தான் உண்டாகும்.

இது போன்ற சில தவறுகளை வீட்டில் செய்தால் பணவரவு கட்டாயம் தடைபடும். வீட்டில் உள்ளவர்களுக்கு மன நிம்மதி கெடும்.

கெட்ட சக்திகளும் உள்ளே நுழைவதற்கு வசதியாக அமைந்து விடும்.கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவது நம்முடைய குலதெய்வம் தான்.

அதனால் நமது வீட்டின் தலைவாசல் என்ற நிலைவாசல் படியில் மஞ்சள் குங்குமம் இட்டு மாலை நேரங்களில் விளக்கு வைத்து வழிபடுவோம். வளம் பல பெறுவோம்.

Customize Text: Font Color:
Exit mobile version