Site icon Nangooram

திருமண யோகத்தையும்,குழந்தைப் பேற்றையும் கொடுக்கும் ஆடி கிருத்திகை விரதம்

ஆடிக் கார்த்திகை என்பது ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் கொண்டாடப்படும் இந்து சமய விழாவாகும். இவ்விழா நாளில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இது தென்னிந்தியா, இலங்கை மற்றும் புலம் பெயர்ந்தோர் இடையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கும் தட்சிணாயனம் புண்ணிய காலமும் இந்த ஆடி மாதத்தில்தான் தொடங்குகிறது..

கிருத்திகை நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் 3வது நட்சத்திரம். தமிழ் மாதமான ஆடியில் இந்த நட்சத்திரத்தால் ஆளப்படும் நாள் ஆடி கிருத்திகை என்று போற்றப்படுகிறது.

முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் கிருத்திகை என்பதால், இந்த நாள் மிகவும் மங்களகரமானதாகவும், முருகப்பெருமானை வழிபட சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது..

இந்த வருடம் 2025ஆடி கிருத்திகை எப்போது? அன்று முருகனை வழிப்பட்டால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்..

இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகையானது ஆடி மாதம் 4ஆம் நாள் (20/07/2025) ஞாயிற்றுகிழமை வருகிறது.

ஆடி கிருத்திகையின் புராணம்..

சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த முருகப் பெருமானை ஆறு கார்த்திகை பெண்கள்தான் வளர்த்தனர். அவர்களை சிறப்பிக்கும் விதமாக அவர்கள் முருகனுக்குரிய நட்சத்திரமாக கருதப்படுவார்கள் என்றும், அந்த நாளில் கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் வழிபடப்படுவார்கள் என்றும், கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுபவர்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்றும் சிவ பெருமான் வரம் அளித்தார். அவர் அளித்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்குரிய நட்சத்திரமாக கருதப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது..

முருகனை வழிபடும் முறை…

ஆடி கிருத்திகை நாளில், சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து நீராடி தங்களுடைய விரதத்தைத் தொடங்க வேண்டும். இந்த நாளில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து நீராட வேண்டும். பின்னர் முருகப் பெருமானின் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பின்னதாக விரதத்தைத் தொடங்கவும்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டின் பூஜை அறையில் முருகனை வழிபட வேண்டும்.. இந்த நாளில் காலையிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து முருகனை மனதிலே நினைத்து வழிப்பட வேண்டும்.. உடல் நலம் குன்றியவராக இருந்தால் கொஞ்சமாக பழங்கள் அல்லது பழச்சாறு அருந்திக் கொள்ளலாம்.. பின்னர் மாலை நேரத்தில் வீட்டில் பூஜைகளை செய்து விட்டு உணவு உண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்..

ஆடி கிருத்திகையின் முக்கியத்துவம்…

தமிழ் மாதமான ஆடி மாதம் மங்களகரமானதாக கருதப்படுகிறது, இது தட்சிணாயனம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது சூரியன் வடக்கிலிருந்து தெற்கு அரைக்கோளத்திற்கு மாறும்.. எனவே, ஆடி மாதம் முழுவதும் தெய்வங்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள், வழிபாடுகள் செய்ய ஏற்றது..

ஆடி கிருத்திகை முருகப்பெருமானின் சக்தி நாளாகக் கருதப்படுகிறது, அன்று முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் அவருக்கு பூஜைகளும் சிறப்புப் பிரசாதமும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் வேறு எந்த தெய்வத்தையும் வணங்குவதில்லை. ஆனால் முருகபெருமானை அனைவரும் வணங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

விரதப் பலன்கள்…

ஆடி கிருத்திகை விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும், வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெற முடியும் என்றும் குழந்தை பேறு உண்டாகும் ஆடிக் கிருத்திகை விரதமும் குழந்தை வரம் தரக் கூடியதாகும்.

இந்த வருடம் இது இரண்டும் சேர்ந்து வருகிறது.குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த நாளில் விரதம் இருந்து, முறையாக வழிபட்டால் நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும்.

இதுவரை திருமணம் ஆகாதவர்கள் அல்லது திருமணம் செய்ய பேச்சு வார்த்தை ஆரம்பிப்பவர்கள் ஆடி கிருத்திகையில் முருகனை வழிபட்டால் கண்டிப்பாக திருமணம் நடக்கும்..

அதுமட்டுமல்லாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். பிரச்னைகளில் இருந்து விடுப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முருகன் அருள் பொழிவார்.

எனவே நாமும் ஆடி கிருத்திகை விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நமக்கு வேண்டியதை அனைத்தையும் கொடுப்பார் முருகக் கடவுள்.

Customize Text: Font Color:
Exit mobile version