மனை தோஷம் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு நிலத்தில் காணப்படும் தோஷங்களைக் குறிக்கிறது. இதை நிவர்த்தி செய்ய பல பரிகாரங்கள் உள்ளது அவற்றில் ஒன்றாக இங்கு நாம் பார்ப்போம்
நீங்கள் சொந்தமாக வீட்டு மனை வாங்கி அதில் வீடு கட்ட தொடங்கும் போது விவரிக்க இயலாத அல்லது இனம் புரியாத அல்லது எதிர்பாராத வகையில் பல்வேறு தடைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் எழக்கூடும்.
வீடு கட்டத் தொடங்கிய தருணத்தில் இருந்த நிலைப்பாடு செல்லச் செல்ல தாமதங்கள் ஏற்பட்டு பணிகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தால் கலங்கி நின்று விட வேண்டாம்.
அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அந்த ஆலயத்தின் வளாகத்தில் இருக்கும் யானையைக் கண்டு ஆசி பெறுங்கள்.
அத்துடன் யானை விரும்பி சாப்பிடும் உணவுகள் என்ன? என்பதனை அதன் பாகனிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதனை திங்கட்கிழமைகளிலோ அல்லது செவ்வாய்க்கிழமைகளிலோ ஒரு வேளை வாங்கித் தருவதற்கு முயற்சி செய்யுங்கள்.
அத்துடன் யானையின் சாணத்தை பாகனின் அனுமதி பெற்று வாங்கி வந்து உங்களுடைய கட்டி முடிக்கப்படாத வீட்டின் ஈசானிய மூலையில் வைத்து விடுங்கள் அல்லது அப்பகுதியை பள்ளம் தோண்டி அதில் புதைத்து விடுங்கள்.
48 மணி நேரம் அல்லது 48 நாட்களுக்குள் தடைப்பட்டிருந்த பணிகள் மீண்டும் வேகம் எடுப்பதை அனுபவத்தில் கண்டு ஆனந்தம் ஆனந்தமாக வாழலாம் என்பது திண்ணம்.
நீங்கள் வசிக்கும் பகுதியில் யானையும் இல்லை, யானைப்பாகனும் இல்லை என்றால் வலம்புரி சங்கினை ஆன்மீக பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் இருந்து வாங்கி உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த வலம்புரி சங்கில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு ,ஜாதி பத்திரி ஆகிய மூலிகை பொருட்களை வாங்கி தூளாக்கி, அதில் வைத்து அதனுடன் சிறிதளவு நீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதனை மாலையில் செய்து நாள் முழுவதும் இந்த நீரை பூஜை அறையில் வைத்து அடுத்த நாள் காலையில் நீராடி இறைவனை மனதில் நினைத்து, ‘வீடு தொடர்பான பிரச்சனைகள் நிறைவு பெற்று, முழுமையாக கட்டி முடிக்கப்பட வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு அந்த நீரை சிறிதளவு அருந்தி விட்டு வீடு முழுவதும் அதனை தெளித்து விட்டு எந்த இடத்தில உங்களுடைய வீட்டிற்கான பணிகள் நடைபெறுகிறதோ அங்கும் அந்த புனித நீரை தெளிக்க வேண்டும்.

