திருமணத்தடையை நீக்கும் விரலி மஞ்சள் பரிகாரம்
தன் பிள்ளைக்கு திருமணம் விரைவாக நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் இந்த பரிகாரத்தினை தங்களது பிள்ளைகளுக்காக செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
நம் அனைவரும் அறிந்தது தான் விரலி மஞ்சள். இதனை 27 என்ற கணக்கில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு விரலிமஞ்சளின் மேலும் குங்குமப் பொட்டினை இட்டுக்கொள்ள வேண்டும்.
குங்குமப் பொட்டிட்டு வைத்த 27 விரலி மஞ்சளையும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று, அந்த அம்மனின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து மனதார உங்களது பிள்ளைக்கு திருமணம் நடக்க வேண்டு மென்று வேண்டிக் கொள்ளவும்.
அந்த விரலி மஞ்சளில் ஒன்றை எடுத்து மஞ்சள் கயிறில் கட்டி அம்மனுக்கு சாத்தி விட வேண்டும்.
மீதமுள்ள மஞ்சளை சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலத்தில் வைத்து ஒரு ரவிக்கை துணியுடன் தானமாக கொடுக்க வேண்டும்.
இவற்றை தானமாகப் பெற்றுக் கொண்ட சுமங்கலிப் பெண்ணின் கைகளால் திருமணமாகாத உங்களது பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் அவர்கள், ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 வாரங்கள் செய்து வர வேண்டும். 21 வாரங்கள் முடிவதற்கு முன்பாகவே உங்களது குழந்தைக்கு திருமணம் நிச்சயிக்கப்படும்.
திருமணம் நிச்சயக்கப்பட்டாலும் இந்த பரிகாரத்தை 21 வாரங்கள் செய்து முடித்து விடுங்கள்.
21 வது வாரம் பரிகாரம் முடியும் போது உங்களால் முடிந்த பிரசாதத்தை செய்து அம்மனுக்கு நைவேத்தியமாக படைத்து அன்னதானம்

