தமிழகத்தில் நடுநிலையோடும்
நேர்மையாகவும் தீர்ப்பு வழங்கி வரும் நீதிபதிகளை வழக்கறிஞர்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் என்ற போர்வையில் நக்சல் பயங்கரவாதிகள் ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் மிரட்டி வருகிறார்கள்..
தீர்ப்பில் குறை இருந்தால் அதனை வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டில் நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டுமே தவிர, தீர்ப்பை எழுதிய நீதிபதியின் ஜாதி மத அடிப்படையில் விமர்சனம் செய்வது நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட்டு மிரட்டல் விடுப்பதாகவே கருத வேண்டும்..
அவ்வாறு நீதி நேர்மையுடன் நடுநிலை உடன் தீர்ப்பு கூறி வரும் நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன், நீதியரசர் புகழேந்தி ஆகியவர்களை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் முன்னாள் நீதிபதிகள் ஹரி பரந்தாமன் உள்ளிட்டவர்களை உள்நோக்கத்துடன் ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் மிரட்டி வருகிறார்கள் என்பதே உண்மை..
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் திட்டமிட்டு கலவரத்தை தூண்டினார் என தேச பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.
மேலும் ஏற்கனவே நீதித்துறைக்கு எதிராக கலவரத்தை உண்டு பண்ணினார் எனவும், வழக்கறிஞராக இருக்கவே தகுதியற்றவர் என்றும் இந்திய பார் கவுன்சிலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்.
அமைதியாக நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எதிராக மனு கொடுத்து மத மோதலை ஏற்படுத்தும் செயல்களை செய்தவர்.
இவ்வாறாக தொடர்ந்து மத மோதலையும் ஜாதிய மோதலையும் செய்து வரும் நக்சல் பயங்கரவாத அமைப்பு கருத்துக்களை கொண்ட அர்பன் நக்ஸல்தான் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்..
இப்படியான நபருக்கு முன்னாள் நீதிபதிகளான சந்துரு மற்றும் ஹரி பரந்தாமன் போன்றவர்கள் ஆதரவு தெரிவிப்பது மிகத் தவறான செயலாகும். எனவே வழக்கறிஞர் சமுதாயமும் மக்களும் இவர் போன்றோரின் கருத்துகளை புறக்கணிக்க வேண்டும்.
நீதி பரிபாலனத்தில் நடுநிலையுடன் நேர்மையாக செயல்படும் நீதிபதிகளை ஜாதியை ரீதியாகவும், மத ரீதியாகவும் உள்நோக்கத்தோடு மிரட்டி வரும் நக்சல் பயங்கரவாதிகளை தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதே தேச நலனில் அக்கறை கொண்ட அனைவரின் எதிர்பார்ப்பு..!!