Site icon Nangooram

தூத்துக்குடியில் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் துவக்கி வைப்பு.

தூத்துக்குடி மாவட்ட காவலர்களுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சியை எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் சார்பு ஆய்வாளர் முதல் காவல்துறை அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சி (19.07.2025) துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று துவக்கி வைத்து பின்னர் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுபகுமார், கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் உட்பட காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டனர்.

Customize Text: Font Color:
Exit mobile version