Site icon Nangooram

சட்டத்தின் கட்டுப்பாட்டில் காவல் நடவடிக்கைகள் உறுதி செய்ய வேண்டும் – Dr. R. ஸ்டாலின் IPS

காவல்துறையின் நடவடிக்கைகள் சட்டப்படியானதாக இருக்க காவல் கண்காணிப்பாளர் Dr. R. ஸ்டாலின் IPS வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து (11-07-2025) நடைபெற்றது.

அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசியதாவது,

01) காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தை பலப்படுத்த வேண்டும்

02) அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

03) வாகன சோதனையின் போது பொதுமக்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும்

04) காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு முறையாக அளிக்க அறிவுரையும் வழங்கினார்.

கடந்த ஜூன் மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திரப் பதிவேடு, குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் என ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையமாக மார்த்தாண்டம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேடயம் வழங்கினார்.

அதனை மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்ல சிவம் மற்றும் மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வேளாங்கண்ணி உதயரேகா,உதவி ஆய்வாளர்கள் இந்து சுதன், வைகுண்ட தாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Customize Text: Font Color:
Exit mobile version