*
ரூபாய் 20,000/- பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த விஜய் ஆனந்துக்கு பொதுமக்கள் பாராட்டு
குமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவர் நேற்று குமாரபுரம் பகுதியில் பைக்கில் செல்லும் போது அனாதையாக ஒரு பை கிடந்தது.
அதை எடுத்துப் பார்த்தபோது 20,350/- (இருபதாயிரத்து முநீநூற்று ஐம்பது ரூபாய் மட்டும்) ஒரு செல்போனும் இருந்தது.
அந்த பையை அவர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பையில் இருந்த செல்போன் மூலம் பையை தவற விட்டவர் கண்டுபிடிக்கப்பட்டு பணத்தை தொலைத்த நபரை காவல் நிலையம் வரச்சொல்லி அவரிடம் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த செயலுக்காக விஜய் ஆனந்த் அவர்களை காவல்துறையினரும் பொதுமக்களும் பாராட்டியுள்ளனர்.
Customize Text:
Font Color:

