Site icon Nangooram

அக்காள் மடத்தில் அதிபயங்கர விபத்து! மூன்று பேர் உயிரிழப்பு!

தமிழக அரசின் உத்தரவின்படி தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையினர் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க பெரும் முயற்சி எடுத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல இடங்களில் தொடர்ந்து நடத்தி  வருகின்றனர். என்னதான் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வாகன ஓட்டுகளின் பாதுகாப்பை கருதியும், சாலையில் பயணிக்கும் பொது மக்களின் பாதுகாப்பு கருத்தையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினாலும் வாகன ஓட்டிகளின், கவனம் இல்லாத் தன்மையாலும், சாலை விழிப்புணர்வு இல்லாததாலும் தன் உயிரைப்பற்றியும், தன் குடும்பத்தினரைப் பற்றியும் துளிகூட அக்கரை இல்லாத நிலையிலேயே வாகனங்களை இயக்கி வருகின்றனர். இப்படி கவனம் இல்லாமல் வாகனங்களை இயக்கியதால் பெரும் விபத்துக்கள் நடந்தேறிய வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில்,

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், அக்காள்மடம் பகுதியில் ஆட்டோவும், டாட்டா ஏஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த ஆட்டோவும் ராமநாதபுரம் நோக்கி வந்த டாட்டா ஏஸ் வாகனுமும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், டாட்டா ஏஸ் ஓட்டுநர் மருத்துமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த விபத்தை வாகன ஓட்டிகள் அனைவரும் கருத்தில் கொண்டு தனக்கும், மற்றவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உள்ளது என்பதை மனதில் பதிய வைத்து,மிகுந்த கவனத்துடனும், முன்னெச்சரிக்கையோடு பொறுமையுடனும் வாகனங்களை இயக்கி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு வாகனங்களை இயக்குவோம் என்று உறுதிமொழி எடுத்து விபத்தில்லா பயணத்தை உருவாக்க வேண்டும்.

Customize Text: Font Color:
Exit mobile version