Nangooram

அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் மாணவி வெற்றி! ஆட்சியர் அள்ளித் தந்த பரிசு!

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் டாக்டர் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் இப்பள்ளி மாணவி நந்தனா மாவட்ட அளவில் இரண்டாமிடத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ரூபாய் மூவாயிரம் பரிசுக்கான காசோலையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி உடன் இருந்தார்.மாவட்ட அளவில் உயர்நிலை,மேல்நிலை,நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிலையில், பேச்சுப் போட்டியில் இப்பள்ளி மாணவி நந்தனா வெற்றிவாகைச் சூடி இரண்டாம் பரிசினை பெற்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.


பரிசு பெற்ற மாணவியை பள்ளி செயலர் அரு.சோமசுந்தரம், தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர்கள் குமார், சூர்யா பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

Customize Text: Font Color:
Exit mobile version