Site icon Nangooram

மது போதை மயக்கத்தில் மாணவர்கள்! முதுகலை ஆசிரியருக்கு அறிவால் வெட்டு!

முதுகலை ஆசிரியர் சங்கம், பள்ளிக்கல்வித்துறக்கு வன்மையாக கண்டனம் தெரிவிப்பு!

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல், S.R அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (16.07.2025) பிற்பகல் மதிய உணவு இடைவேளை முடிந்த போது மதுபோதையில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் பள்ளிக்கு வந்துள்ளனர்.

அதனைக் கண்ட அப்பள்ளியின் அரசியல் அறிவியல் முதுகலை ஆசிரியர்
திரு.சண்முகசுந்தரம் அவர்கள் மது போதையில் வந்த மாணவர்களை தலைமை ஆசிரியரிடம் வாருங்கள் என சொல்லியுள்ளார்.

இதனை கேட்ட நான்கு மாணவர்களும் அந்த ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மதுபாட்டிலால் தலையில் தாக்கியுள்ளனர்.

இதனால் ஆசிரியர் சண்முகசுந்தரம் அவர்கள் படுகாயம் அடைந்துள்ளார்.

மேலும் அந்த மாணவர்கள் பேனாவை வைத்து அவரின் கழுத்து உட்பட சில இடங்களில் குத்தி உள்ளார்கள்.

இதனை கவனித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக அந்த ஆசிரியரை மீட்டு மருத்துவ உதவிக்காக மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பாக அப்பள்ளியின் முதுகலை பொருளியல் ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய நிகழ்வும் இதே பள்ளியில் தான் நடைபெற்றது.

ஆசிரியர்கள் மீது தொடர்ந்து இது போன்ற தாக்குதல்கள் நடக்கும் போது தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது போதிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதையாக நடந்து கொண்டு வருகிறது.

ஆசிரியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளை முற்றிலும் தடுக்க முடியும்.

பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அரசு சார்பாக உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

மற்ற துறைகளில் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு இருக்கக்கூடிய பணிப் பாதுகாப்பு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஆசிரியர்களுக்கு இல்லை என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் நிரூபித்து வருகிறது.

ஒவ்வொரு அரசும் ஓட்டு கேட்கும் போது மட்டும் அரசு ஆசிரியர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இது போன்று பள்ளிகளில் நடக்கும் ஆசிரியர்கள் மீது தாக்குதல்கள் நிகழ்வுகளுக்கு கொடுப்பது இல்லை.

ஆசிரியர் மீது நடந்த இந்த கொலைவெறி தாக்குதலை அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
என்று அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Customize Text: Font Color:
Exit mobile version