நீதி வெல்லுமா?
மயிலாடுதுறை மாவட்ட DSP ஆக இருந்த நேர்மையான காவல்துறை அதிகாரி திரு. சுந்தரேசன் அவர்களை தமிழக அரசும், காவல் துறை மேலிடமும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இது நேர்மைக்கு தரப்பட்ட தண்டனை. இதுவே திராவிட மாடல் ஆட்சி.
திரு. சுந்தரேசன் அவர்கள் மீதான நடவடிக்கை ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் மீது சாதீய வன்மத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை என தகவல்.
அவர் ஒரு பிராமணர் என்பதாலும், நூறு சதவீத நேர்மையுடன் செயல்பட்டார் என்பதாலுமே அவர் மீது நேர்மையற்ற இந்த அரசும், காவல் துறையும் இத்தகைய கொடிய, மனசாட்சியற்ற நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அரசிடமோ, இதன் முதல்வரிடமோ இதற்குப் பிறகு நியாயத்தை, நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதால் உயர்நீதி மன்றம் இது விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட திரு. சுந்தரேசன் அவர்களுக்கு உடனடியாக நியாயம் வழங்க வழிவகை செய்திட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தை தமிழக அந்தணர் வாழ்வுரிமை கட்சி நீதி தேவதையின் பாதம் பணிந்து வேண்டுகிறது.
மயிலாப்பூர் K ரவி கணேசன்,
நிறுவனத் தலைவர்,
தமிழக அந்தணர் வாழ்வுரிமை கட்சி.

