இந்திய விமானப்படை அதிரடி சாதனை

by ஆசிரியர்

இந்திய விமானப்படை சீனாவை முந்தி உலகின் 3- வது பெரிய விமான படையாக சாதனை…!

மேலும் 45 ராணுவ ஹெலிகாப்டர்க்கு ஆர்டர், இந்த மாதம் இணையும் 3 ராணுவ கப்பல், 30 போர் விமானம்.

கெத்து காட்டும் இந்திய விமானப்படை..!

சீனாவை பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடம்..!

இந்திய விமானப் படை உலகின் சக்திவாய்ந்த விமானப் படைகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நவீன ராணுவ விமானங்களின் உலக டைரக்டரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீனாவை இந்தியா வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் தரவரிசை.

ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் மேக்தூத், ஆபரேஷன் காக்டஸ், ஆபரேஷன் பூமாலை உள்ளிட்ட முக்கிய வான்வெளி ஆபரேஷன்களை இந்திய விமானப்படை நிகழ்த்தியிருக்கிறது. போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என சுமார் 1,600 விமானங்கள் இந்திய விமானப்படையின் வசம் உள்ளன.

1,70,000க்கும் மேற்பட்டோர் இந்திய விமானப் படையில் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே உலகின் நான்காவது சக்திமிக்க விமான படையாக இந்தியன் ஏர் போர்ஸ் இருந்து வந்தது.

முதலிடத்தில் அமெரிக்கா..!

இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியா 3வது இடத்திலும், சீனா 4வது இடத்திலும் உள்ளன. குறிப்பாக உலகின் சக்திமிக்க நாடுகளாக கருதப்படும் ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ் விமானப்படைகளை பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.
98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47,140 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்திய உலக டைரக்டரி, இறுதியில் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.

படைகளில் 3வது இடம்.

தற்போது வெளியான தகவல்களின் படி இந்திய விமானப் படை உலகின் சக்திவாய்ந்த விமானப் படைகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

World Directory of Modern Military Aircraft எனப்படும் நவீன ராணுவ விமானங்களின் உலக டைரக்டரி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அண்டை நாடான சீனாவை பின்னுக்குத் தள்ளி வரலாற்று சாதனையை எட்டியிருக்கிறது இந்திய விமானப்படை.கடந்த சில மாதங்களுக்குப் முன்னர் வரை 3 வது இடத்தில் சீனா இருந்தது குறிப்பிடத்தக்கது…

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00