மத்திய பிரதேசம் என்றாலே மாமா ஜி என்று அழைக்கப்படும் திரு சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தான். ஐந்து முறை முதல்வராக இருந்தவர். வெற்றி பெற முடியாது என்று நினைத்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற கைதேர்ந்த தலைவர். தேர்தல் வெற்றிக்குப் பிறகு இளைய தலைமுறை பாஜக கார்யகர்த்தரை அரியணையில் அமரச்செய்து அமைதியாக ஒதுங்கியவர். இன்று தேசத்தின் விவசாய அமைச்சர்.
தமிழக பாஜகவை யாரும் நினைத்துப் பார்க்காத வேகத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலைக்கு உயர்த்திய புயல்வேகத்துக்கு சொந்தக்காரர் நம் அண்ணாமலை. தீயசக்தியை அழிப்பதற்கு கூட்டணி அவசியம் என்பதால், தனக்கு விருப்பமில்லை என்றாலும், தலைமைக்கு கட்டுப்பட்டு, ஒதுங்கி வழி விட்டவர். மாநிலத் தலைவராய் சிறப்பாக பணியாற்றி விட்டு தனது பணிக்காலம் முடிந்த பிறகு நயினார் நாகேந்திரன் அவர்களை முன்மொழிந்து மாநில தலைவர் ஆக்கியவர்.
இருவரும் வல்லவர்கள். இருவரும் தனி மனிதனை விட கட்சி பெரிது என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர்கள்.
எதிரிகள் பலர், ஆதரவாளர் என்ற போர்வையில், “இவர்கள் தனி கட்சி ஆரம்பிப்பார்கள்” என்று வதந்திகளை பரப்பிய போதும்; அதை எல்லாம் தூக்கி எரிந்து, காலில் மிதித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோரின் தளபதியாக சிறப்பாக செயல்பட்டு வருபவர்கள்.
பிறப்பின் அடிப்படையில் பதவிக்கு வந்தவர்கள் அல்ல இவர்கள். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர்கள்.