சாக்கோட்டை வீரசேகர உமயாம்பிகை கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

ஐந்து நாட்டுப் பகுதியினர் இழுத்த தேருடன் வானவேடிக்கை, மேளதாளம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்ற ஆனி மாத தேர் திருவிழா

by ஆசிரியர்

தேர் திருவிழா என்பது கோயில்களில் நடைபெறும் ஒரு முக்கியமான விழாவாகும். இதில், கடவுளின் சிலை அல்லது உருவத்தை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து, பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச் செல்வர். இது பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் தரவல்ல ஒரு நிகழ்வாகும்.

தேர் திருவிழா, கடவுள் மீது பக்தியை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். தேர் இழுப்பதன் மூலம், பக்தர்கள் தங்கள் பக்தி மற்றும் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். தேர் திருவிழா ஆன்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேர் திருவிழா சாக்கோட்டையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோவில் தேர் திருவிழா, விசுவாவசு வருஷம் ஆனி மாதம் 28ஆம் (12/07/2025) நாள் சனிக்கிழமை நடைபெற்றது.

தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வான வேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க தொடங்கப்பட்டது.

பெரிய தேரை சாக்கை நாடு,
வடபோகி நாடு,
பெரிய கோட்டை நாடு,
தேர் போகி நாடு,
ஜெயங்கொண்டான் மாகாணம் ஆகிய ஐந்து நாட்டவரும், சிறிய தேரை பாலை நாட்டுக்காரர்களும் மற்றும் பொதுமக்களும் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

மாலை சரியாக 4:30 மணிக்கு தேர் இழுக்கப்பட்டு மாலை 6:00 மணிக்கு தனக்குரிய இடத்தில் நிலை பெற்றது. இத்தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிவ சக்தியின் அருள் பெற்று பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேர் திருவிழாவின் போது எந்தவிதமான சிறு அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் காவல்துறையினர் மிகச் சிறப்பான முறையில் பணியாற்றி கண்ணும் கருத்துமாக இருந்து மக்களை பாதுகாத்து தன் கடமையை மிகச் சரியாக செய்துள்ளனர், என்பது வரவேற்புக்கு உரியதாகும்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00