காதலர்களின் சர்ச்சையால் அரங்கேறிய கொலை! குற்றவாளியை தேடும் காவல்துறை!திருவாரூரில் பெரும் பரபரப்பு!

by ஆசிரியர்

காதலி தன்னுடன் பேசாததால், அவருடைய வீட்டிற்கே சென்ற காதலன் அங்கு பிரச்சினையில் ஈடுபட்டதோடு, சண்டையை விலக்க வந்த நீதிமன்ற ஊழியரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டம், பாண்டுகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஆதம் ( 23). தற்போது தென்காசியில் வசித்து வருகிறார். இவரும், திருவாரூர் மாவட்டம் புலிவலம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணும் நட்புடன் பழகி வந்தனர் பாலடைவில் பழக்கம் காதலாக வளர்ந்து வந்துள்ளது.இந்நிலையில் சில நாட்களாக ஆதமை காதலித்த பெண் பேசாமல் இருந்த வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆதம், தனது நெருங்கிய நண்பர்களான பாண்டுகுடியை சேர்ந்த முகமது ராகுல், தென்காசியை சேர்ந்த ஹாஜ் முகமது ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டிற்கு சென்று அங்கு அவரிடமும், அவரது பெற்றோரிடமும் இதுபற்றி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அது பெரும் வாக்குவாதமாக மாறிவிட்டது.அப்போது, அப்பெண்ணின் அண்ணனுக்கும், அவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்கிற நீதிமன்ற ஊழியரும், தட்சிணாமூர்த்தி என்பவரும் சண்டையை தடுக்க வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதம், தான் முன்பே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சந்தோஷ் குமார் மற்றும் தட்சிணாமூர்த்தியை சரமாரியாக குத்தி தாக்கியுள்ளுர். இதில் சந்தோஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த தட்சிணாமூர்த்தியை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த காவல்துறையினர், சந்தோஷ் குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து , ஆதமின் நண்பர்களான முகமது ராகுல், ஹாஜ் முகமது ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள ஆதமை தேடி வருகின்றனர். காதலர்கள் இடையேயான சண்டையை தடுக்கச் சென்ற நீதிமன்ற ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது பள்ளி மாணவர்களுக்கு, கல்வி பயிலும் காலத்திலிருந்து சமூக விழிப்புணர்வையும் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் குருகுல கல்வியாக கற்றுக் கொடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பாதுகாக்க வழி வகுக்கும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எண்ணி வருகின்றனர் இதை அரசு கவனத்தில் கொண்டு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை, கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00