ஆவணிப்பட்டி ஆஞ்சநேயர் ஆலயத்தில் அமாவாசை பூஜை!

by ஆசிரியர்

ஸ்ரீ பக்த ஜெயம் கொண்ட ஆஞ்சநேயர், ஸ்ரீ ஆதிஅந்த பிரபு ஆலயத்தில் 24/07/2025 வியாழக்கிழமை ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் கோலாகலமாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, ஆவணிப்பட்டி கிராமத்தில்,ஸ்ரீ விநாயகப்பெருமான், ஸ்ரீசண்டிதேவி உடன் அருள்பாலித்து கொண்டிருக்கும், அடியவர்கள் துயர் தீர்த்து பக்தர்களின் வேண்டுதல்களை வேண்டியபடியே தந்தருளும் ஸ்ரீ பக்த ஜெயம் கொண்ட ஆஞ்சநேயர், ஸ்ரீ ஆதிஅந்த பிரபு ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாதஸ்வரம்,மேளம் இசை முழங்க ஆஞ்சநேயருக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள் ஆராதனைகளுடன் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அலங்காரமும் மகா தீப ஆராதனையும் நடைபெற்றது. பிறகு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அவர்களின் பெயர் நட்சத்திரம் சொல்லி வேண்டுதல்களை சங்கல்பம் செய்து அர்ச்சனை பிரசாதம் வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்த அமாவாசை சிறப்பு பூஜையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்து, அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற பிரார்த்தனை செய்து கொண்டு மகிழ்ச்சியோடு ஆஞ்சநேயரின் அருள் பெற்று சென்றனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00