கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை அடுத்த குமராபுரம் கிருஷ்ணசாமி பள்ளி வேன் கடந்த ஜுலை-8 தேதியன்று செம்மங்குப்பம் ரயில்வே கேட் மூடப்படாததால் வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவர்கள் உட்பட நான்கு பேர் இறந்தனர்.
அதனால் அப்பள்ளியின் கல்லூரி வேன் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தனர்.அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் உத்தரவின் பேரில் மேற்படி பள்ளியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சார்பில் மனநல திட்டம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்தன்,மருத்துவர் அஸ்வின், நெல்லிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் உலகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைத்து ஓட்டுநர்களுக்கும் பார்வை திறனை மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
பள்ளி மாணவ மாணவிகள் வாகனங்களில் பயணிக்கும் போது சினிமா பாடல்களை போடக்கூடாது.
பள்ளி மாணவர்கள் வீட்டில் இறக்கி விடப்படும் போது உதவியாளர் பிள்ளைகள் சரியான முறையில் இறங்கியதை ஊர்ஜிதம் செய்த பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள்.