இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதியின் சொந்த தொகுதியில் ரகுபதி படத்துடன் பெரிய டாரஸ் லாரிகளில் வண்டல் மண் பெயரில் கிராவல்மண் கடத்தல்- கனிம வள கொள்ளையை தடுக்க பொதுமக்கள் வலியுத்தல்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் உள்ள கண்மாய்களில் வண்டல் மண் பெயரில் கிராவல் கனிமவள கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய திருமயத்தை சேர்ந்த ஜெகபர் அலி கடந்த ஜனவரி மாதம் லாரி ஏற்றி கொலை செய்யபட்ட நிலையில், அதற்கான வழக்கு விசாரணை நடைபெற்ற வரும் நிலையில், அதில் தொடர்புடையவர்களுக்கு இன்னும் தண்டனை கிடைக்காத நிலையில், திருமயம் தொகுதியில் தொடர்ந்து கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும்,இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி புகைப்படத்தை லாரியில் ஒட்டி முறையான அனுமதி எதுவும் பெறாமல் மிகப்பெரிய டாரஸ் லாரிகளில் 24 மணி நேரமும் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சரின் புகைப்படத்தை லாரியில் ஒட்டியுள்ளதால் காவல்துறையோ, கனிமவளத் துறையினரோ, வருவாய்த்துறைனரோ கண்டு கொள்வது இல்லை.
இதனால் சர்வ சாதாரணமாக 24 மணி நேரமும் கனிம வள கொள்ளை நடைபெற்று வருகிறது. இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக ரகுபதிக்கு அந்த இலாகா வழங்கப்பட்டதா?அல்லது இயற்கை வளங்களை கொள்ளை அடித்து நாசம் செய்வதற்காக அந்த இலாகா வழங்கப்பட்டதா? என அந்த தொகுதி முழுவதும் தொகுதி மக்களால் பரவலாக பேசப்படுகிறது. எனவே அமைச்சர் பெயரில் கனிமவள கொள்ளைகளில் ஈடுபடுபவர் மீதும் அதனை தடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமயம் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.