நவகோள்களின் தோஷங்கள்! அவைகளை போக்கும் குளியல் பரிகாரங்கள்!!

by ஆசிரியர்

நவ கோள்களால் ஏற்படும் தோஷங்களை நீக்குவதற்கு பலவித பரிகாரங்கள் சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதில் நாம் காண போகும் இந்த குளியல் பரிகாரம் எளிமையாகவும், சிறப்பாகவும் தோஷங்களை நீக்கும் வல்லமை பெற்றவையாகும்.

நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களைக் குறைத்தும், நற் பலன்கள் பெற்றும் வாழலாம் என்பது திண்ணம்.

மேலும்,ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற் பலன்கள் பெற்று மகிழ்ச்சியோடு வாழலாம் என்பது உசிதமாகும்.

சூரியன்

கச கசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம்.சிறிதளவு போதும் இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.

சந்திரன்

தயிரை முதலில் உடல் முழுதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.

செவ்வாய்

வில்வக் கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரமாகும்.

புதன்

மஞ்சள், கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.

வியாழன்

கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

சுக்கிரன்

பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

சனி

கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

ராகு

மகிஷாக்ஷி சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

கேது

அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

மேற்குறிப்பிட்ட வழிமுறையோடு ஒவ்வொரு கிரகத்திற்கு உண்டான குளியல் முறைகளை நாம் தினம்தோறும் நம்பிக்கையுடன் பயன்படுத்தி வரும்போது அபரிமிதமான பலன்கள் கிடைக்கப் பெறுவதை நீங்கள் உணரலாம். ஆகவே மேற்குறிப்பிட்ட பரிகாரங்களை அலட்சியம் செய்யாமல் நம்பிக்கையுடன் செய்து சிறப்போடு வாழுங்கள்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00