ஓரணியில் தமிழ்நாடு! ஸ்டாலினுடன் தமிழ்நாடு!

by ஆசிரியர்

தமிழ்நாடு முழுவதும் ஒரே முழக்கம்! மக்களின் இதயங்களை வென்று, நம்பிக்கையின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உற்சாகத்தைப் பரப்பி வருகிறது. மக்கள் திரளாக ஒன்றுகூடி, திமுகவினரை உள்ளன்போடு வரவேற்று, உபசரித்து, தங்கள் அசைக்க முடியாத ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த 20 நாட்களில் 68,000 வாக்கு சாவடிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் திமுகவினர் நேரடியாய் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். இதுவரை சுமார் 1.75 கோடி மக்கள் திமுகவில் உறுப்பினராக இணைந்துள்ளனர்.

தமிழ்நாடு இன்று ஒரே அணியாக, ஒரே குரலாக, நம் முதல்வர் ஸ்டாலினின் தலைமையில் அணிவகுத்து நிற்கிறது. மக்களின் நம்பிக்கைக்கு ஒரே முகவரியாக, வளர்ச்சியின் வழிகாட்டியாக, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

அவரது தொலைநோக்கு திட்டங்களும், மக்கள் நலன் காக்கும் அர்ப்பணிப்பும், தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களை வென்றுள்ளன.

குறிப்பாக பெண்களும் இளைஞர்களும் அணி அணியாக ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் தங்களை இணைத்து வருகின்றனர்.

2026-இல் திமுக மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கு மக்களின் இந்த அசாதாரண ஆதரவே சாட்சியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒலிக்கும் மக்களின் குரல், ஸ்டாலினின் தலைமையில் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும்.

ஓரணியில் தமிழ்நாடு – ஸ்டாலினுடன் தமிழ்நாடு!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00