37
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் திரு.ராஜன் என்ற நபரின் மனைவி, திருமதி.ஜீன் ஜோசப் என்பவர்,ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க,திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என,தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம்.அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?
Customize Text:
Font Color: