பணியில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டு வீர மரணம் அடைந்த எஸ் எஸ் ஐ. வில்சனின் பெயரை காவலர்கள் குடும்ப நல விடுதிக்கு பெயர் சூட்டி வில்சனின் மனைவியை ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறக்க வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெருமைமிகு டாக்டர். ஆர்.ஸ்டாலின் அவர்களை காவல்துறையினர் அனைவரும் பெருமகிழ்ச்சியுடன், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

சுட்டு கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த போலீஸ் எஸ்எஸ்ஐ வில்சன் பெயரில் ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினர் தங்கும்,குடும்ப நல விடுதிக்கு மறைந்த எஸ் எஸ் ஐ வில்சன் பெயரை சூட்டிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர்.ஸ்டாலினை சந்தித்து ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் வில்சன் உடன் காவல் பயிற்சி மேற்கொண்ட காவல்துறையினர் மற்றும் உடன் பணிபுரிந்த காவலர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் காவலர்களின் ஒற்றுமைக்கு வழி வகுத்து மறைந்த எஸ்எஸ்ஐ வில்சனின் மனைவியை வைத்து ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைக்க அனுமதித்தமைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.