போக்குவரத்து காவலரின் நலனுக்காக இருக்கை பேரிகேட் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து குறைகளை தெரிவிக்க Traffic Suggestion Box – கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் இங்கு பணி அமர்த்தபட்டதிலிருந்து, முதல் கடமையாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, தனக்கு கீழ் வேலை செய்யும் சக காவலர்களுக்கும் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதையும் சரி செய்து கொடுத்து, அவருடைய ஆளுமைக்கு உட்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து பணி செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில்,போக்குவரத்து காவலர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்வதனால் Varicose veins எனப்படும் விரிசுருள் சிறை நோயுக்கு ஆளாகின்றனர். Varicose veins நோய் வராமல் தடுக்க நீண்ட நேரம் நின்றபடி பணிப்புரியும் போக்குவரத்து காவலர்கள்,பணியின் போது போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் நேரத்தில் உட்கார்ந்து பணி செய்யவும், மழை வெயில் காலங்களில் ஒதுங்கும் வகையிலும் இருக்கை பேரிகேட்
இவைகளை பத்மனாபபுரம் போக்குவரத்து காவல் சரகத்திற்கு உட்பட்ட சுவாமியார் மடம் பகுதியில் மாவட்ட எஸ்.பி. மருத்துவர். R.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், பொதுமக்கள் தங்களது போக்குவரத்து சம்பந்தப்பட்ட குறைகளை காவல் அதிகாரிகளுக்கு எளிதாக தெரிவிக்க போக்குவரத்து குறைவாக்கும் பெட்டி Traffic Suggestion Box அமைக்கப்பட்டது.இதன் மூலம் வரும் மனுக்களை பத்மனாபபுரம் போக்குவரத்து காவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக தீர்வு தரப்படும் விதமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட அவள் கண்காணிப்பாளர் மருத்துவர். R.ஸ்டாலின், காவல் பணியாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியான “மனம் திறந்து” நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டு
விரிசுருள் சிறை நோயினால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியும், மாவட்டத்தில் பல இடங்களில் இருக்கை பேரிகேடு அமைக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடதக்கது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பணிக்கு வந்த நாளிலிருந்து கன்னியாகுமரி பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் இருப்பதை உறுதி செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். ஆர். ஸ்டாலின் அவர்களை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.