சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்பி வாழ்த்து

by ஆசிரியர்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நை. சிலம்பரசன் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை  வெகுவாக  பாராட்டியுள்ளார்.

பழவூர் காவல் நிலையம் – சந்தேகமான முறையில் பெண் இறந்த வழக்கானது கொலை என கண்டறியப்பட்டு– குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 30.06.2025 அன்று அடையாளம் தெரியாத பெண் பிரேதம் கண்டறியப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் பழவூர் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என  வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பெண்ணின் இறப்பு சம்மந்தமாக, தீவிர விசாரணையை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நை. சிலம்பரசன் அவர்கள் உத்தரவிட்டார். புலன்விசாரணையில், சம்பவ இடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள காற்றாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சிசிடிவி தரவுகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் இருந்து கிடைத்த முக்கிய தகவலின் மூலம், மேற்படி சம்பவத்தில் அமல்ராஜ் என்ற லிபி (வயது 53), மேலமணக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளதை உறுதிசெய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையின் போது, குற்றவாளியான அமல்ராஜ், இறந்த பெண்ணை கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகிலிருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, சுமார் 100 கிமீ தூரம் பயணித்து பழவூர் அருகே கொண்டு வந்ததாகவும், அங்கு  இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில்,  தாக்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு, அவர் இறந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
மேலும், பெண்ணின் அடையாளம் கண்டறியப்பட்டு, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடக்கத்தில் எந்தவொரு சிறு தடயங்களும் இல்லாத நிலையில், சிசிடிவி பதிவுகளிலிருந்து கிடைத்த சிறு தகவலை பயன்படுத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திறமையான விசாரணையின் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு,  இறந்த நபரின் அடையாளமும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விசாரணையை சிறப்பாக முன்னெடுத்த வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு வெங்கடேஷ், உட்கோட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல்
ஆளினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நை. சிலம்பரசன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00