வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமாக இருப்பதால் நகராட்சி, மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு மு. க. ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்
தமிழ்நாட்டின் 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளிலும் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக,நடைபெற்று வரும் சாலை, பாதாள சாக்கடைப் பணிகள் முடிக்கப்பட வேண்டும், சாலைகளின் தரம் உறுதி செய்யப்படவேண்டும். மழைநீர் வடிகால்களின் பராமரிப்புப் பணிகள் நிறைவடைய வேண்டும். மேலும்,விதிகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடைகளை முறைப்படுத்த வேண்டும்,சாலை விளக்குகள், நடைபாதைகள் சீரமைக்கப்பட வேண்டும்.
மக்களுக்குத் தேவையான இடைவெளியில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும்,என மக்களின் எதிர்பார்ப்புகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு உத்தரவுகளாக வழங்கியுள்ளேன்!” என மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.