நெல்லிக்குப்பத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் – மாவட்ட கலெக்டர் துவக்கி வைப்பு

by ஆசிரியர்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் அவர்களால் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கப்பட்டது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை, உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட அலுவலக திட்ட முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் கூட்டத்தை குறைக்கவும் மேற்படி திட்டங்கள் வெகுஜன மக்களுக்கு சென்று சேறும் வகையில் இத்திட்டம் முதல் நாளான இன்று 21,29 மற்றும் 30 ஆகிய மூன்று வார்டு மக்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்ச்சியில் ஆணையர் கிருஷ்ணராஜன், நகரமன்ற தலைவர் ஜெயந்தி, துணைத் தலைவர் கிரிஜா,திமுக பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் மணிவண்ணன்,விசிக நகர செயலாளர் திருமாறன், மற்றும் கவுண்சிலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00