காணாமல் போன கைபேசிகள் கண்டுபிடிப்பு, உரியவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைப்பு!

by ஆசிரியர்

திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போன கைபேசிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், 100 கைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேற்குறிப்பிட்ட கைபேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில்,சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகன்  மேற்பார்வையில்,காவல் ஆய்வாளர் ரமா தலைமையில் கைபேசிகள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்களில் 100 கைபேசிகள் கைப்பற்றப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட கைபேசிகளின் மொத்த தொகை ரூபாய்18,18,873/- (பதினெட்டு லட்சத்து,பதினெட்டா யிரத்து,எண்ணூத்தி எழுபத்து மூன்று ரூபாய் மட்டும்) ஆகும்.மேலும் காணாமல் போன செல்போன்கள் தொடர்பாக புகார் அளிக்க CEIR- Central Equipment Identity Register https://www.ceir.gov.in/ இந்திய தொலைத் தொடர்புத் துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் புகார்தாரர் தனது தொலைந்து போன கைபேசி தொடர்பான விவரங்களை பதிவு செய்து புகார் அளிக்கலாம், அல்லது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீதை பதிவு செய்து புகார் கொடுக்கலாம்.

மேற்குறிப்பிட்டபடி புகார் கொடுத்தபின் மனுதாரர் கைபேசி எண் வேறு ஒருவரால் பயன்படுத்த முடியாதவாறு Block செய்யப்படும். மேலும் மனுதாரரின் கைபேசியில், புதிதாக சிம்கார்டு பயன்படுத்திய விபரங்கள் தொடர்பான அறிவிப்பு மனுதாரருக்கு உடனடியாக அனுப்பப்படும்.

காணாமல் போன கைபேசியை பயன்படுத்தி பல குற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளதால் தொலைந்த போன கைபேசி குறித்து உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தால், தவறவிட்ட கைபேசியின் மூலமாக நடைபெற இருக்கும் குற்றங்களை தடுப்பதோடு மட்டுமல்லாமல்,கைபேசியை எளிமையாக மீட்க முடியும் என பொதுமக்களிடம் காவல்துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் (அ) https://cybercrime.gov.in/ என்ற இணைய தளத்தில் புகார் அளிக்கலாம். என்றும் பொதுமக்களுக்கு அறிக்கை தெரிவிக்கப்பட்டது.

தவறவிட்ட கைபேசியை அதற்குரிய உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டதால், பெருமகிழ்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல் காவல்துறையினரை பாராட்டியும் உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00