கராத்தே கலையை முதல்வர் கோப்பையில் சேர்க்க,கராத்தே காவலன் தனசேகரன் வேண்டுகோள்

by ஆசிரியர்

தமிழனின் பாரம்பரிய கலை வீரக்கலை கலை கராத்தே விளையாட்டுக்கு இன்றைக்கு அகில இந்திய கராத்தே சங்கத்தில்  ( KAI ) ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால்   இந்திய ஒலிம்பிக் சங்கம் தேசிய கராத்தே சங்கத்திற்கு வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன 

இந்திய ஒலிம்பிக் சங்கம் ( IOA ) அங்கீகாரம் வழங்கிய விளையாட்டுக்கள் மட்டுமே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ( SDAT ) அங்கீகாரம் பெற முடியும் 

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரம் இல்லாத கராத்தே விளையாட்டுக்கு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முதல்வர் கோப்பை போட்டியில் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்க இயலாது 

தமிழனின் தற்காப்பு கலை கராத்தே விளையாட்டில் இன்றைக்கு தமிழகத்தில் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் அங்கீகாரம் இல்லாமல் கண்ணீர் சிந்தி வருகின்றனர்

தமிழகத்தில் இருக்கும் அப்பாவி ஏழை, எளிய கராத்தே மாணவ செல்வங்களை காப்பாற்ற தயவு கூர்ந்து விளையாடு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்/ செயலர் அவர்கள் துணை முதல்வர், விளையாட்டு துறை அமைச்சர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதல்வர் கோப்பை போட்டியில் சேர்த்துக் கொள்ள உதவி செய்ய வேண்டுமாய் இரு கரம் கூப்பி வணங்கி கேட்டுக்  கொள்கின்றேன் என்று, கராத்தே காவலன் தனசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Customize Text: Font Color:

Related Posts

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00