தடுமாறும் அமெரிக்கா! புதிய தடம் பதிக்கும் இந்தியா!

by ஆசிரியர்

தடுமாறும் அமெரிக்கா, தடம் பதிக்கும் இந்தியா!!

கடந்த 50 ஆண்டுகளாக ஐநா சபை என்பது அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் இருந்த ஒரு ஏவல் அமைப்பு. அதற்கு காரணம் ஐநாவிற்கு மிக முக்கியமான நிதி அளிக்கும் நாடாகவும், அதன் பெரிய இராணுவ சக்தியும், உலகளவில் மிகப்பெரிய பொருளாதார சக்தியை தன் கைக்குள் வைத்திருந்த நாடாக இருந்தது. அதுமட்டுமல்ல உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் டாலரை நம்பியே இருந்ததும், அந்த வர்த்தகம் SWIFT என்ற அமெரிக்க சார்பு வங்கி நிறுவனத்தை சார்ந்தே இருந்தது.

மேலும் நேட்டோ நாடுகள் அதன் கீழிருந்தது, அமெரிக்கா சொல்வதற்கு ஆமாம் சாமி போடுவதுதான் அவர்கள் வேலை. அதனால் அதன் பொருளாதார தடைகள் என்பது தன்னிச்சையானதாக இருந்தாலும் ஒரு நாட்டை நிர்மூலமாக்கும் அளவிற்கு அதன் ஆதிக்கம் இருந்தது.

அது பல சிறிய நாடுகள் மீது மட்டுமல்ல சில பெரிய நாடுகள் மீது கைவைத்து அதன் பொருளாதாரத்தை சரிய வைத்து சரணடைய வைத்துள்ளது. ஈரான், ஈராக் என்று அந்த தடையை பல நாடுகள் சமாளித்தாலும் சரிந்தது. அதற்கு முதலில் பெப்பே காட்டியது இந்திய அரசு.

வாஜ்பாய் காலத்தில் அணுகுண்டு சோதனை செய்தபோது இந்தியா மீது அப்படிப்பட்ட ஒரு தடையை விதித்தது. அப்போது கூட இந்தியாவை IT போன்ற சேவைத்துறையில் இந்தியாவின் தேவை அதற்கு இருந்ததால், இந்தியா மீது முழு பொருளாதார தடையை போடாமல், டெக்னாலஜி போன்ற துறைகள் மீது மட்டுமே கைவைத்தது.

ஆனால் இந்தியா அதை வெற்றிகரமாக சமாளித்தது மட்டுமல்ல, அமெரிக்காவின் தடையை மீறி பல விஷயங்களை உள்நாட்டில் தயாரித்து அதன் தடைக்கு முதன் முறையாக பெப்பே காட்டியது இந்தியா! அதாவது இந்தியா மீதான தடை என்பது அதை தாமதப்படுத்தலாம், ஆனால் தடுக்கமுடியாது. அப்படி மீறி வளர்ந்து விட்டால் அதன் ஆதிக்கம் அமெரிக்காவையே அசைக்கும் வலிமை கொண்டது என்பது அதற்கு நன்கு தெரியும்.

அதனால் நேரிடையாக மோதாமல் பின் வழியாக வாஜ்பாய் ஆட்சியை தேர்தலில் வீழ்த்தியதன் மூலம் அதன் ஏவலாளிகளை ஆட்சியில் வைத்து தனக்கு தேவையானதை சாதித்துக் கொண்டது!

பின்னர் மோடி ஆட்சிக்கு வந்தபோது, சீனாவின் ஆதிக்கம் உயர, அதை சரிகட்ட இந்தியாவின் தேவை இருந்தது. அதனால் அந்த தடைகள் ஒன்றன்பின் ஒன்றாக விலகியது. இந்தியா சத்தமில்லாமல் பொருளாதாரத்திலும், டெக்னாலஜி, இராணுவ கட்டமைப்புகள் என்று எல்லாவற்றிலும் தன்னை வளர்த்து ஸ்திரபடுத்திக் கொண்டது.

அதுவரை பலமில்லாத நாடுகள் மீது தடை விதித்து அதன் சட்டாம்பிள்ளை தனத்தை உறுதி செய்த நிலையில், உக்ரைன் விஷயத்தில் ரஷ்யா மீது கடுமையான தடையை விதித்தது. அதன் டாலர் உபயோகத்தை தடுத்து முடக்கி, வருமான வழிகளை முற்றிலும் மூடியபோது, ரஷ்யா மீண்டும் ஒரு மோசமான நிலையை நோக்கி போனபோது இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கி ரஷ்யாவை காப்பாற்றியது.

இந்தியா மட்டுமா வாங்கியது, சீனாவும்தானே என்றால், சீனா முக்கியமாக ஈரானிடம் இருந்து கள்ளச்சந்தையில்தான் பிரதானமாக வாங்கியது. ஆனால் இந்தியா தனக்கு மட்டும் வாங்காமல், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கி, அதை சுத்திகரித்து, பெட்ரோல், டீசலாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

அதாவது இந்தியாவிடம் கச்சா எண்ணெய் உற்பத்தி இல்லாமலே அதன் பெட்ரோல், டீசல் ஏற்றுமதி இரண்டாவது பெரிய ஏற்றுமதியானது. முன்பு நேரடியாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிய ஐரோப்பிய யூனியன் அதிக விலை கொடுத்து இந்தியா வழியாக ரஷ்ய எண்ணெயை வாங்கியது.

ஆனாலும் அமெரிக்கவால் அதை தடுக்க முடியவில்லை. டாலரின் டிமாண்டை கச்சா எண்ணெய் விலை உயர்வை காட்டி சகட்டுமேனிக்கு பிரிண்ட் செய்யவும் முடியவில்லை. எனவே இரண்டாவது முறையாக இந்தியா அமெரிக்காவிற்கு பெப்பே காட்டியது மட்டுமல்ல, அதை சுட்டிக்காட்டி, மேலை நாடுகளின் காலணி ஆதிக்கத்தை அந்த நாடுகளிலேயே இந்தியா கண்டித்தபோது உலகில் பல நாடுகள் அதை ரசித்தது.

இன்று அடுத்ததாக வந்துள்ள உலக வர்த்தகத்தை பெரியளவில் நிலைகுலைய செய்த ட்ரம்ப் டாரிஃபில், சீனா சாஸ்டாங்கமாக காலில் விழுந்து அமெரிககாவின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டது. அதற்குகாரணம் அதன் பொருளாதார ஆதிக்கம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது மட்டுமல்ல, அதன் அல்ட்ரா மாடர்ன் ஆயுதங்கள் இந்தியா உடனான 88 மணி நேர போரில் பொய்த்து போனதுமே!

இப்போதும் இந்தியாவின் மீது ஒரு பெரிய வரியை அமெரிகக விதிக்க முடியாது என்ற சூழல். அதனால் சீனாவுக்கு இணையாகவோ, அல்லது கொஞ்சம் அதிகமாகவோ வரி விதிக்கக்கூடும். ஆனால் அதை தாண்டி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 50% வரி என்றும், BRICS கரன்ஸியில் பங்கெடுத்தால் 500% வரி என்றும் எச்சரித்துள்ளது.

இந்த இரண்டு கேஸிலேயும் இந்தியா, சீனா, பிரேஸில் பெருமளவில் பாதிக்கும். ரஷ்யாவிற்கு மாற்றாக எங்கே கச்சா எண்ணெய் வாங்குவது? ஈரானில் கூடாது, வெனிசூலாவிலும் தடையுள்ளது, முடியாது, அப்போது அமெரிக்கா சொல்லும் இடத்தில்தான் வாங்க வேண்டும்.

அப்படி அமெரிக்கா சொல்லும் மத்திய கிழக்கு நாடுகளிடம் வாங்கினால், கச்சா எண்ணெய் $150 டாலருக்கு உயரும், உடனே டாலருக்கு பெரிய டிமாண்ட் உயரும். உயர்ந்தால் டாலரை இலவசமாக பிரிண்ட் செய்துகொண்டு ஊரை ஏமாற்றி ஏகபோக முதலாளியாக வாழ நினைக்கிறது.

உக்ரைனால் ரஷ்யா மீது தடை விதித்தபோது இந்தியா, சீனா போன்ற வலுவான நாடுகள்தான் அதை மீறியது. ஆனால் இப்போது இந்தியா மீது தடை விதித்தால் அதை மீறுவோம் என்பது ஆஃப்ரிக்க மற்றும் உலக நாடுகளின் ஓபனான நிலைப்பாடு. அதற்கு காரணம் கோவிட் வந்தபோது தடுப்பூசி கொடுக்க அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அதன் ஏழ்மை நிலையை பயன்படுத்தி, கனிம வளங்களை எழுதி கொடுக்க நிர்பந்தித்தபோது, இந்தியா அவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி கொடுத்தது. அந்த நன்றியை எங்களால் மறக்கவும் முடியாது, உங்களை மன்னிக்கவும் முடியாது என்று வெளிப்படையாக பேசுகிறது.

அதற்கு இன்னொரு காரணம் BRICS இப்போது 11 நாடுகள் அங்கமாகவும், 21 நாடுகள் பார்டிசிபேட்டரி நாடுகளாகவும், நாற்பதற்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு நாடுகளாகவும் மாறியுள்ளதால், அமெரிக்காவின் தடை பிசுபிசுத்துப் போகிவிடும். அதுவும் இந்த ஆதரவு இந்தியாவிற்கு மட்டுமானது! அதனால் ட்ரம்பர் சொன்னதுபோல வரி விதிக்கா விட்டால் உலக நாடுகள் அமெரிக்காவை மதிக்காது என்ற திரிசங்கு சிக்கலில் ட்ரம்பர் மாட்டிக்கொண்டார்.

இதில் கூடுதலாக நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பு ரஷ்ய ஆதரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூவியபோது, நீங்கள் இந்தியாவிடம் இருந்து வாங்கும் எரிபொருள் எங்கிருந்து வருகிறது என்று தெரியாதா என ஐரோப்பிய நாடுகளை கலாய்த்துள்ளார். இன்றுவரை அமெரிக்கா செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரஷ்யாவிடமே வாங்குகிறது.

இப்போது ஐரோப்பிய நாடுகள் கூட அதை தவிர்க்க முடியாது, ஏனென்றால் அதன் மிக மோசமான பொருளாதார நிலை. அதற்கு மேலாக பிரான்ஸிடம் இந்தியா வைத்திருக்கும் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் அதை அனுமதிக்காது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு எப்போது பிரச்சினை வரும் என்று தெரியாத நிலையில், இந்தியா வரவேண்டிய பலர், வெளியே போனால் விசா கேன்சலாகி விட்டால் என்ன செய்வது என்று பலர் பள்ளி விடுமுறையில் இந்தியா வர நினைத்தவர்கள் புக் செய்த டிக்கெட்டுகளைக்கூட கேன்சல் செய்துவருகிறார்கள்.

அவர்கள் நிரந்தரமாக அங்கே குடியேற நினைத்தவர்கள் கனவு கலைகிறது. அது ட்ரம்பர் பதவி இருக்கும் அடுத்த மூன்றாண்டுகள் மட்டுமே இருக்கலாம் என்று தங்கள் பயணத்தை தள்ளி வைக்கிறார்கள்.

இந்திய மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து விட்டது. அமெரிக்க பல்கழைக்கழகங்களுக்கு வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை மூலம் வந்த நிதிதான் அதை நிர்வகிக்க உதவிய நிலையில் அந்த நிதியை அமெரிக்க அரசு கொடுத்தாக வேண்டும்.

மேலும் அமெரிக்காவில் இந்தியர்கள்தான் இஸ்ரேலியர்களை விட மிக வசதியான எத்னிக் குரூப் என்பதால், அங்கே அவர்களின் சேமிப்பை கார் மற்றும் வீடு வாங்குவதில் பிரதானமாக முதலீடு செய்து வந்தார்கள். இப்போது அவர்கள் நிரந்தர குடியுரிமை என்பது கானல் நீராக மாறி இருப்பதால், நீண்டகால முதலீடாக ரியல் எஸ்டேட்டில் வீடு வாங்க முதலீடு போடுவது வெகுவாக குறையும்.

இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல, மற்ற நாடுகளில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பதால், அது நேரடியாக அமெரிக்க ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் பெரும் சரிவை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. அது ரியல் எஸ்டேட்டை பாதித்தால் அதன் கேஸ்கேட் இம்பேக்ட் 2008 நடந்தது போல அடுத்தடுத்த துறைகளை பாதிக்கும்.

இந்திய IT Engineers வேலைகள் குறைந்து வருவதும், அதை Artificial Intelligence மூலம்
சமாளிக்கலாம், ஆனால் அவர்களிடம் இருக்கும் சேமிப்புகள் பில்லியன் கணக்கில் வெளியேறுமே?

இதற்கிடையில் அமெரிக்க முதலீடுகளை இந்திய ஸ்டாக் மார்க்கெட்டில் இருந்து வெளியே எடுத்து பங்கு சந்தையில் பெரும் பெரும் சரிவை ஏற்படுத்த நினைத்தது. ஆனால் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அந்த சரிவை ஆதாயமாக்க முயல்வதால், முதலீடு செய்வதால் அதையும் செய்ய முடியவில்லை. அதன் விளைவாக மீண்டும் அந்த முதலீடுகள் இந்தியா இது போன்ற வகைகளில் திரும்பி வர ஆரம்பித்துள்ளது.

அது மட்டுமல்ல வெளிநாட்டினர் அமெரிக்காவில் இருந்து பணத்தை அனுப்ப கூடுதல் வரி விதிப்போம் என்று சட்டம் வருவதால், இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பு சுருங்குவதாலும், டாலரின் Purchase Parity Power (PPP) குறைவதாலும், அதன் மதிப்பு வீளும் என்பதால், அந்த பணத்தை இப்போது இந்தியாவில் பங்கு சந்தை போன்ற இடங்களில் முதலீடு செய்வதால் அமெரிக்க அரசின் கட்டுப்பாடும் வீழ்கிறது.

அதாவது டாலரின் விலை உச்சத்தில் இருக்கும்போது இந்திய ரூபாயில் முதலீடு செய்து, டாலர் வீழ்ச்சி பெற்றபின்னர் அதை டாலராக மாற்றினால் பெரிய ஆதாயம் கிடைக்கும் என்றும் முதலீடு செய்கிறார்கள். அதனால் அமெரிக்கா நினைத்ததுபோல இந்தியாவில் FII இன்வெஸ்ட்மெண்ட் மூலம் அமெரிக்க அரசு நினைப்பதுபோல இந்திய பங்கு சந்தையை இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை.

இது எல்லாம் அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் கைவிட்டுப்போவதை காட்டுகிறது. இந்த நிலையில் Apple, Boeing, G&E, Tesla போன்ற பெரிய நிறுவனங்கள் அமெரிக்க கட்டுப்பாட்டை மீறி இந்தியாவில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளது. அதை தடுத்தால் பொருளாதாரம் வீழும், தடுக்காவிட்டால் வல்லரசு ஆதிக்கம் மாறும்!

ஏற்கனவே எப்போது ரிஸஸன் வருமோ என்று பயந்து கொண்டிருக்கும் அமெரிக்காவை தாங்கி பிடிப்பது உக்ரைன், இஸ்ரேல் போருக்காக விற்கும் ஆய்தங்கள்தான் எனும்போது ரஷ்யா போரை நிறுத்தினாலும் பிரச்சினை, நிறுத்தாவிட்டாலும் பிரச்சினை.

அமெரிக்காவின் ஆதிக்கமான கடுமையான தடைகள் என்று அளவிற்கு அதிகமாக சட்டாம்பிள்ளைத்தனம் செய்தால் BRICS வேகமெடுக்கும் எனபதால் குளம்பிப்போன அமெரிக்கா, உக்ரைனை ரஷ்யாவின் தலைநகர் மீது தாக்குதல் நடத்த பேக்டோர் வழியாக நீண்ட தூர ஏவுகணை கொடுத்து தாக்கச்சொல்லி இருக்கிறது.

அதாவது ரஷ்ய மக்கள் மீது உக்ரைன் தாக்கினால், ரஷ்யா டேக்டிகல் அணு ஆயுதத்தை உக்ரைன் மீது ஏவலாம் அல்லது மக்கள் மீது தாக்குதலை செய்தாக வேண்டும். அதன் மூலமாவது ரஷ்யாவை தனிமைபடுத்தலாம் என்பதுபோல கணக்குடன் அமெரிக்கா தடுமாற்றத்துடன் வழி தெரியாமல் தவிக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவோடு பல நாடுகள் அணிவகுக்க தொடங்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் அமெரிக்கா எப்போதுமே அதன் தேவைக்கு எது அவசியமோ அதைத்தான் செய்யும். அதற்கு நண்பர்கள், பகைவர்கள் எல்லாம் நிரந்தரமல்ல என்பதால் அதை நம்ப முடியாது என்று மாற்று ஒன்றை தேடிய நிலையில், ரஷ்யாவையோ, சீனாவையோ நம்ப முடியாமல் இருந்தது.

இன்று அந்த நம்பிக்கையை, கோவிட் காலங்களில் அதை ஆதாயமாக்காமல் உதவி செய்த இந்தியாவின் போக்கின் மூலம் பெரிய நம்பிக்கையை உலகளவில் விதைத்துள்ளது. அதனால் வியட்நாம், ஆர்மீனியா, கிரீஸ், சைப்ப்ரஸ் என்று மட்டுமல்ல அமெரிக்காவால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நம்பிய தைவானே அமெரிக்காவை நம்ப முடியாது என்பதால் இந்தியாவின் பக்கம் சாய்கிறது.

சீனா இந்தியாவை எதிர்த்தபோது நேரடியாக எல்லையில் மோதாமல், சீனாவின் எதிரிகளுக்கு பிரம்மோஸ் போன்ற ஆயுதங்களை கொடுத்து அவர்கள் மூலம் செக் வைத்தது. அதன் பின்னால் துருக்கி பாகிஸ்தான் மூலம் இந்தியாவை எதிர்க்க, கிரீஸ் , சைப்ரஸ், ஆர்மீனியா மூலம் செக் வைத்தது.

இவையெல்லாம் ஒரு வல்லரசு நாடுகள் செய்யும் யுக்தி என்பதால் , இந்தியா ஏற்கனவே வல்லரசாகிவிட்டது என்று மேற்கத்திய வல்லுனர்கள் கருத்து கூற ஆரம்பித்துள்ளார்கள். அதை ட்ரம்பர் ரெண்டுங்கெட்டானாக வேகப்படுத்துகிறார் என்கிறார்கள்.

அதாவது ஒரு வல்லரசின் ஆதிக்கம் என்பது ஒரு வகையில் மட்டும் இருந்தால் அது நீண்ட காலம் நிலைக்காது. அதனால் அமெரிக்கா ஆயுத பலத்தையும், பொருளாதர பலத்தையும், மீடியாவின் தாக்கத்தையும், அரசியல் தலையீடுகள் மூலம் ஆதிக்கம், கிறிஸ்தவ மெஷினரிகள் என்ற வகையில் பல்முனை கட்டுப்பாடுகளை உலக நாடுகள் மீது வைத்திருந்தது.

இப்போது அதையே இந்தியாவும் செய்கிறது. பொருளாதார ஆதிக்கம், மிகப்பெரிய சந்தை, உலகெங்கும் இந்தியர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் தொழில்கள், நிபுனத்துவம், வங்கி வர்த்தகம், நம்பிக்கை என்பதை தாண்டி யோகா, மெடிடேஷன் போன்ற வகைகளில் சனாதனமும் வேகமாக காலூன்ற தொடங்கி விட்டது.

உலகின் மிகப்பெரிய FinTech கம்பெனியான Visa வை இப்போது இந்தியாவின் UPI முந்தியுள்ளது. விஸாவுக்கு முதலீடுகளும், கட்டுப்பாடுகளும், சர்வீஸ் சார்ஜுகளும் இருக்க, அது எதுவும் இல்லாமல் ஒரு பார்கோடில் கீரை விற்கும் ஸ்ட்ரீட் வெண்டார் விற்க முடியும்போது, ஏன் விசாவால் முடியவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். இந்தியாவின் UPI ஆஃப்ரிக்க மற்றும் ஏழை நாடுகளில் வேகமாக வளர்கிறது. அதை தடுக்க அமெரிக்காவால் முடியவில்லை என்பதே அதன் கை நழுவிப்போன ஆளுமையை கைகாட்டுகிறது.

ஆனால் இந்தியா அதை வைத்து அந்த நாடுகளை ஆளத்துடிக்கவில்லை, பகடைக்காயாய் பயன்படுத்தி அவர்கள் உழைப்பை உறிஞ்சவில்லை. மாறாக நானும் வாழ்கிறேன், நீயும் வாழவேண்டும், எல்லோரும் சேர்ந்து, சிறப்பாக வழ்வோம் என்று தாயுள்ளத்தோடு அரவணைத்து செல்கிறது.

அதனால் அமெரிக்காவால் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது, தனிமைப்படுத்த நினைத்தால் அது தனிமைப்பட்டுவிடும் என்பதால் தடுமாறுகிறது அமெரிக்கா.

உங்களுக்கு திரிசங்கு நிலையில் இருக்கும் அமெரிக்கா மீள்வதற்கு வழி தெரிந்தால் ட்ரம்பருக்கு கூகுள் அக்கவுண்டுக்கு மெயில் அனுப்புங்கள்..

தடுமாறும் அமெரிக்கா, புதிய தடம் பதிக்கும் இந்தியா!! வாழ்க நம் பாரதம்!!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00