பேரூர் ஆலயத்தில் ஆகம விதி மீறல்! அதிகாரிகளின் அட்டகாசம்! யார் இதை தட்டி கேட்பது?

by ஆசிரியர்

கோவை மாவட்டம், பேரூர் ஸ்ரீ பட்டீஸ்வரர் திருக்கோவிலில் இரவு கோவிலின் நடைகள் சாத்தப்பட்ட பின்பு ஆகம விதிகள் படி நடைகள் திறக்க கூடாது அதை நாட்டை ஆளும் முதலமைச்சராக இருந்தாலும் பள்ளியறை நிகழ்ச்சி முடிந்தவுடன் கோவில் கதவுகளை திறந்து வழிபடக்கூடாது இறைவன் இருக்கக்கூடிய கதவுகளை திறக்கவும் கூடாது இது ஆகம விதிகளில் முக்கியமான ஒரு விதி!

ஆனால், அதை ஒரு தனிப்பட்ட நபருக்காக கோவிலின் உதவி ஆணையர் பள்ளியறை நிகழ்ச்சி முடிந்த பின்பும் ஆகம விதிகளுக்கு எதிராக கோவிலுடைய கருவறை கதவுகளை திறந்து அவருக்கு தரிசனம் செய்யக்கூடிய நிகழ்வை நடத்தியுள்ளார். இதுகுறித்து பக்தர் ஒருவர் உதவி ஆணையர் அவர்களிடமும், பள்ளியறை நிகழ்ச்சி முடிந்த பின்பும் கருவறையை திறக்கக் கூறி தரிசனம் செய்த ஒரு முக்கிய விஐபி அவர்களிடமும் உரிய கேள்விகளை எழுப்பி எந்த பதிலும் கொடுக்காமல் கோவில் ஆகம விதிகளுக்கு மாறாக மிகப்பெரிய தவறுகளை செய்துள்ளார்கள்.

அதனால், பேரூர் பட்டீஸ்வர பக்தர்கள் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும், ஆகம விதிகளுக்கு முரணாக செயல்பட்ட உதவி ஆணையர் மீதும், கருவறையை திறந்து தரிசனம் செய்த விஐபி நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் ஆகம விதிகளை மதிக்காமல் மிகப் பெரிய தவறுகளை எதிர்காலத்தில், குற்றங்கள் இழைப்பதற்கும் இச்சம்பவம் உதாரணமாக உருவாகி விடும் காரணத்தால், இந்த ஆகம விதிகளுக்கு மாறாக செயல்பட்ட திருக்கோயில் பணியாளர் திரு.வேல்முருகன் அவர்கள் மீதும்
கூடுதல் பொறுப்பில் உள்ள உதவி ஆனையர் விமலா அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருக்கோவில் பக்தர்கள் சார்பாக மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00