ஆபத்தில் சிக்கித் தவிக்கிறீர்களா? அப்படியென்றால் இவர்தான் உங்களுக்கு சரியான வழிகாட்டி.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் ஆலங்குடி என்ற ஊரில் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்திருக்கோயில், நவகிரகத் தலங்களில் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.
எங்குமே நிம்மதியில்லை! எதிலும் நம்பிக்கையில்லை! வாழ்க்கையை நினைத்தாலே துக்கமும் குழப்பமும் நீள்கிறது. நிச்சயத்தன்மையற்ற ஆபத்து எப்போதும் சூழ்ந்துள்ளது. நஷ்டம், கடன், தோல்வி; துரோகம், உறவுகளின் அலட்சியம்; வியாதி என எதிர்மறையான சம்பவங்கள் என்னைத் தொடர்ந்து வாட்டிவருகின்றன, என்ன செய்வது என்று தெரியவில்லை எனத் தவிக்கிறீர்களா! ஆபத்தில் உதவவென்றே ஒருவர் ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் என்ற திருப்பெயரில் அமர்ந்திருக்கிறார். அவரை சரணடையுங்கள். சகலமும் மாறும்; வாழ்க்கை ஒளிமிக்கதாக மாறும்.
பாற்கடலில் பொங்கி வந்த ஆலகால விஷம் சகலரையும் மிரட்டியது.ஆபத்து ஆபத்து என அனைவரும் ஓட, ஈசன் அந்த விஷத்தை ஏற்று விழுங்கினான். ஆலங்குடித்த (விஷம்) ஈசன் 13 என்றானார். அவர் அமர்ந்த இடமும் ஆலங்குடி என்றானது. ஆலங்குடியான் மட்டும் ஆலங் குடியாமல் இருந்திருந்தால் அன்றே சகல உயிர்களும் அழிந்திருக்கும். ஆபத்து என்று தவித்திருந்தவர்களைக் காத்ததால் ஈசன் ஆபத்சகாயேஸ்வரர் என்ற திருநாமமும் கொண்டார். நீங்களும் எந்த ஆபத்து என்றாலும் இவரைப் பற்றிக்கொள்ளுங்கள்! கவலை விடுங்கள்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் ஆலங்குடி என்ற ஊரில் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்திருக்கோயில், நவகிரகத் தலங்களில் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. குருவருள் இருந்தால் பிறகென்ன குறைகள் இல்லையே! விசுவாமித்ரர், சம்பந்தர், அப்பர், சேக்கிழார் பாடி அருளிய இத்தலம் இரும்பூளை என்றே குறிப்பிடப்படுகிறது. பூளைச்செடி அடர்ந்த வனம் என்பதால் இப்பெயர் உருவானது. இலுப்பை மரம், பூளைச் செடியே இங்கு தல விருட்சங்கள். ஆலங்குடி என்பது பின்னால் உருவான பெயர். காவிரி, அமிர்த புஷ்கர்ணி தீர்த்தங்கள். ஞான கூபம் என்ற கோயில் கிணறும் இங்கு விசேஷமானது.
மேலும் இங்கு பிரம்மா, விஷ்ணு, இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், சூரிய, சந்திர, சப்த ரிஷி ஆகிய 13 தீர்த்தங்களும், பூளைவள நதி, அமிர்த புஷ்கர்ணி, ஞான கூபம் போன்ற 16 தீர்த்தங்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.