புண்ணிய நதிகளில் நீராடுவது இந்து மதத்தில் ஒரு முக்கியமான சடங்கு ஆகும். இது பாவங்களைப் போக்கிக் கொள்ளவும், ஆன்மீக பலன்களைப் பெறவும் செய்யப்படும் ஒரு செயல். குறிப்பாக, கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் நதிகளில் நீராடல் என்பது பல புண்ணியங்களை தரும் என்கிறது சாஸ்திரம்.ஆடிமாதம் முதல் மூன்று நாட்களில் நதிகளில் நீராடக்கூடாது என்ற ஒரு ஐதீகம் பழங்காலத்தில் இருந்தது,
இதனை நதி ரசத்ஜுவாலா என்பார்கள்.இது நதிகளுக்கு உரிய தீட்டு என்று இந்த மூன்று நாட்களை ஒதுக்கினார்கள்.காரணம் ஆடி மாதத்தில் நதிகளில் நீர் ப்ரவாகம் புதிதாக ஓடிவரும். இந்த புதிதாக ஓடிவரும் நீர் கலக்கம் உடையதாக இருக்கும்,இதன் காரணமாக இந்த நீர் தூய்மை அற்றது என்று ஒதுக்கினார்கள்.மேலும் ஆடிமாதத்தில் தான் தட்சிணாயன புண்ணியக்காலம் ஆரம்பமாகின்றது,
சூரியன் தன் பயணத்தை வழக்கிலிருந்து தென்திசைக்கு நகர்த்த ஆரம்பிக்கும் மாதமாக இந்த ஆடி மாதம் விளங்குகின்றது.ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றே கூட சில நூல்களில் குறிப்புக்கள் வருகின்றது.
அம்பாளுக்கு உரிய மாதம் எனவும் ஸக்தி என்றால் ஆற்றல் என்ற பொருளும் வருகின்றது. சூட்சுமமாக சிலவகையான அருளாற்றலை பெறவும் இந்த மாதம் சிறப்பாக விளங்குகின்றது.உத்திராயண {வடக்கு}சூரிய கிரணங்களை விட தட்சுணாயன {தெற்கு} சூரியக்கிரணங்கள் விளைச்சலுக்கு விசேஷமானதாக கருதப்படுகின்றது.
பொதுவாக ஆடி தொடங்கி
தை மாதம் வரையிலும் நல்ல மழைக்காலமாகவும் பயிரிடுவதற்கு ஏற்ற மாதமாகும் அமைகின்றது.இதில் ஒரு ரகசியம்,சரியான சித்த மருத்துவம் அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அந்த ரகசியம் என்ன தெரியுமா?மூலிகைகளில் கர்மகாண்ட மூலிகைகள் என்று உண்டு.அதாவது மாந்திரீக ஆற்றல் மிக்க மூலிகைகளாகும்.இந்த மூலிகளைகள் அனைத்தும் ஆடி தொடங்கி தை மாதம் வரையிலான இந்த ஆறுமாத காலக்கட்டத்தில் அமானுஷ்ய சக்தி மிக்கதாக இருக்கும்.
மூலிகைகளில் சிவ சக்தி அம்சம்தான் உண்டு ,சக்தி அம்சம் உடைய மூலிகைகளான துளசி,வேம்பு,வாழை, நித்தியக்கல்யாணி போன்றவைகள் நிறைய ஆற்றல் உடையதாக இருக்கும்.இதனை சரியாக பயன் படுத்தினால் பல காரியங்களை சாதித்துக் கொள்ளலாம்.
அது மட்டுமல்ல பூநீறு என்று ஒன்று உண்டு இது பூமியில் சில பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரு விதமான ஒலியையும் ஒளியையும் ஏற்படுத்திக்கொண்டு வெடித்து வெளிவரும்.
இதனை முக்கியமான சரக்காக சித்த மருத்துவர்கள் கற்ப மருந்துகளில் சேர்ப்பார்கள்.இது ஆடி மாதம் தொடங்கி தை வரையிலும் அவ்வப்போது வெளிப்படும்..
கெடா ,பஹாங் போன்ற மலேசியாவின் மாநிலங்களிலும் இது வெளிப்படுகின்றது.இது பலருக்கு தெரியாது,தமிழ்நாட்டில் தான் இது கிடைக்கும் என்று கூறுவார்கள் .
ஆனால் மலேசியாவிலும் இது உண்டு.இதனை மலாய்க்கார மருத்துவர்கள் மாந்திரீகம் போன்ற காரியத்திற்காக பயன் படுத்துகின்றார்கள்.மேலும் ஆடிமாதம் பகற் பொழுது குறைவாகவும் இரவு பொழுது கூடியும் இருக்கும்.
இத்தருணத்தில் நீர் நிலைகளில் சந்திரனின் அமுதக்கிரணங்கள் அதிகமாக ஈர்க்கப்பட்டு நீர்நிலைகள் மிகவும் ஆற்றல் உடையதாக இருக்கும்.இந்தக்காலக்கட்டத்தில் நதிகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் ,கடல் போற்றவற்றில் குளிப்பதினால் உடலுக்கும் நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியும் புதுதெம்பும் ஏற்படும்.
அதுமட்டுமல்ல சந்திரனின் அமுதக்கிரணங்கள் நீர்நிலைகளில் அதிகமாக ஈர்க்கப்படுவதால் இதில் முங்கி எழும்போது மூளைக்கு அபாரமான மின் காந்த இயக்கம் ஏற்படுகின்றது.
தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனிடமிருந்து
ஒருவிதமான சூட்சும சக்திகள் வெளிப்படுவதாகவும்பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும் என்றும், உயிர்களுக்குத் தேவையான ஆதாரசக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவென்றும் வேதங்கள் கூறுகின்றன.
எனவே ஆடி மாதம் பிறந்ததும் நீர் நிலைகளில் நீராடுவது போற்றப்படுகிறது.
ஆடி மாதம் ஆறுகளில் நீராடும்போது, ஆறு எந்த திசையிலிருந்து ஓடி வருகிறதோ அந்த திசையைப் பார்த்து நீராட வேண்டும்.
கோவிலில் உள்ள குளத்தில் நீராடும் போது வடக்குதிசை நோக்கி நீராட வேண்டும்.