ஒவ்வொரு மனிதரிடமும் ‘உள்ளங்கை’ பத்ம கமலம்’ எனப்படும் கண்களாகும்.இங்கு லக்ஷ்மி உறைகிறாள்.மகாலக்ஷ்மி உறையும் சக்தி இடங்கள் ஐந்து உண்டு. அதனால்தான் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை விரித்து தரிசிக்கிறோம்.இது வைகறை கர தரிசன வழிபாடு.
துர்க்கா,சரஸ்வதி,லக்ஷ்மி ஆகிய முப்பெருந் தேவியரின் தரிசன சேவை.தாமரை மலர்,யானையின் முன்புறம்,பசுவின் பின்புறம், வில்வ இலையின் பின்புறம்,நெல்லிக்கனி ஆகியவை லக்ஷ்மி ஸ்தானங்கள்.
இவைகளை முடிந்தவரை தினசரி தரிசித்தால் வாழ்வில் தரித்திரம் இராது.தாமரை மலர்,பசுவின் பின் புறம் ,நெல்லிக்கனி போன்றவை எளிதாக தரிசிக்க வாய்ப்புள்ளது.
வேதசத்சங்கம்
ஆண்டாள்,நப்பின்னை,நீளா தேவி,ராதை
ஆகியோர் மஹாலக்ஷ்மியின் அம்சங்கள்.
தினசரி தூங்கி எழுந்தவுடன் உள்ளங்கைகளைப் பார்த்து”கராக்ரே வஸதே லக்ஷ்மீ, கர மத்யே சரஸவதி, கரமூலேது கௌரீஸ்யாத் ப்ரபாதே கர தர்ஸனம்”
என்ற எளிய துதியை ஓதி உள்ளங்ககையில் முப்பெருந் தேவியை நினைத்தல் நல்லது.
உள்ளங்கையின் சக்தி அளவிட முடியாதது…
கோயில்களில் தீர்த்தம் வாங்குதல், பிரசாதம்,துளசி,குங்குமம் வாங்குதல் உள்ளது.நெற்றியில் திருநீரு இடும்போது உள்ளங்கையால் இடுதல் மிக நல்லது.
கோயிலில் சிறிது நேரம் அமர்ந்த பின்பு,கோயிலை விட்டு வெளியே வரும்போது கைகளை ஊன்றி எழக்கூடாது.தரிசனப் பலன் போய்விடும்..
சாப்பிடும் போது உள்ளங்கையை ஊன்றக் கூடாது. சக்தி போய் விடும்.ஒருவரை ஆசிர்வதிக்கும் போது உள்ளங்கை மூலம் நல் வாழ்த்துக்கள் வணங்குவோருக்கு செல்கிறது.
மஹான்கள்,ஞானிகள் உள்ளங்கையில் பூஜை நீரை ஊற்றியே நம்மீது தெளிப்பர். பெரும் முனிவர்கள் உள்ளங்கையில் நீர் ஊற்றியே பழங்காலங்களில் சாபமிடுவார்களாம்.
ஹஸ்த நக்ஷத்ரத்திற்கு கைகளின் சக்திகள் இருப்பதாக நம்பப் படுகிறது. இவையெல்லாம் முன்னோர்கள் நமக்கு கூறிய அறிவுரைகள்.இவை ‘உள்ளங்கை நெல்லிக்கனி’யாய் தெரியும்.
நாமும் காலையில் எழுந்ததும் முதலில் நம்முடைய உள்ளங்கைகளின் தரிசனம் கண்டு முப்பெரும் தேவியரின் ஆசி பெற்று நிறைந்த செல்வத்தோடும், தீர்க்க ஆயுளோடும் வாழ்வோமாக!